மேஷம்

மேஷம்: உங்கள் ராசியை கூட்டு கிரகங்கள் பார்ப்பதால் எதிலும் நிதானம், கவனம் தேவை. தேவையற்ற மனக் குழப்பங்கள் வந்து நீங்கும். சகோதர உறவுக ளால்  செலவுகள் இருக்கும். சுக்கிரன், சனி சேர்க்கை பார்வையால் தனலாபம் உண்டு. கைமாத்து கொடுத்த பணம் கை வந்து சேரும். இடமாற்றம்  சம்பந்தமாக  முக்கிய முடிவு எடுப்பீர்கள். பெண்கள் பழைய நகையை மாற்றி புது டிசைன் நகை வாங்குவார்கள். உத்யோகத்தில் சீரான போக்கு  காணப்படும். உயர்  அதிகாரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வியாபாரம் லாபகரமாக நடக்கும். வேலையாட்களால் செலவுகள் இ ருக்கும். ஆடல், பாடல்,  கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

அஸ்வினி: தனலாபம்,

பரணி: குழப்பம்,

கிருத்திகை: செலவுகள்.

ரிஷபம்

ரிஷபம்: மனக்குழப்பம், முட்டுக்கட்டைகள் நீங்கி உங்கள் ஆசைகள் நிறைவேறும். சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றுள்ளதால் பெண்களால் ஆதாயம் உண்டு. புதிய   வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண விஷயமாக முக்கிய முடிவுகள் ஏற்படும். வார கடைசியில் வெளியூர் பயணங்கள் இ ருக்கும்.  பேரன், பேத்திகள் மூலம் மகிழ்ச்சியும், செலவுகளும் ஏற்படும். தாயார் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.  உத்யோகத்தில்  ஏற்பட்ட மனக்குறைகள் சரியாகும். உயர் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் சமாளித்து விடுவீர் கள். பணப்புழக்கம் உண்டு.  எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வியாபாரம் கை கொடுக்கும்.

கிருத்திகை: ஆதாயம்,

ரோகிணி: நல்ல தகவல்,

மிருகசீரிஷம்: பயணங்கள்.

மிதுனம்

மிதுனம்: பஞ்சமஸ்தானத்தில் பல கிரகங்கள் கூட்டணி சேர்ந்து இருப்பதால் மனசஞ்சலம், அமைதியின்மை ஏற்பட்டு சரியாகும். செவ்வாய் நீச்சமாக இருப்பதால்   நிறை, குறைகள் உண்டு. சகோதர உறவுகள் கை கொடுத்து உதவுவார்கள். மாமனாரிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். கர்ப்பிணிகள் கவன மாக  இருப்பது அவசியம். அவசிய தேவைக்காக பணம் புரட்ட வேண்டி வரலாம். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவீர்கள். அலுவ லகத்தில்  வேலைச்சுமை, பயணங்கள் வந்து நீங்கும். வியாபாரம் சாதகமாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். ரெடிமேட் ஆடைகள், உள்ளா டைகள், பேன்ஸி  ஸ்டோர் வியாபாரம் சீராக இருக்கும்.

மிருகசீரிஷம்: டென்ஷன்,

திருவாதிரை: ஆலய தரிசனம்,

புனர்பூசம்: நிறை-குறை.

கடகம்

கடகம்: உங்கள் எண்ணங்கள், ஏக்கங்கள், ஆசைகள், கூடி வரும் நேரம். சொத்து விற்பது, வாங்குவது சம்பந்தமாக முக்கிய முடிவுகள் உண்டாகும். காலியாக   இருக்கும் இடத்திற்கு புதிய வாடகைதாரர்கள் வருவார்கள். செவ்வாய் ராசியில் இருப்பதால் நிதானமாக போகவும். குரு பார்வை காரணமாக சுபநி  கழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். மாமியார் உடல்நலம் பாதிக்கப்படலாம். வீட்டில் பராமரிப்பு செலவுகள் வந்து நீங்கும். உத்யோகத்தில்  சாதகமான  காற்று வீசும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம் கை கொடுக்கும். புதிய கான்ட்ராக்ட், ஆர்டர்  கிடைக்கும். தங்கம்,  வெள்ளி வியாபாரம் ஏற்ற  இறக்கம் இருக்கும்.

புனர்பூசம்: உற்சாகம்,

பூசம்: அலைச்சல்,

ஆயில்யம்: முக்கிய முடிவு.

சிம்மம்

சிம்மம்: ராசிநாதன் சூரியன் தன, வாக்குஸ்தானத்தில் இருப்பதால் துணிச்சல், தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கன்னி பெண்களுக்கு கல்யாண ராசி   கூடிவரும். தந்தையின் கருத்திற்கும், சொல்லிற்கும் செவி சாய்ப்பது அவசியம். மனம் ஆன்மிகத்தில் லயிக்கும். கோயில், குளம் என்று சென்று வருவீர் கள்.  சகோதர உறவுகளால் அலைச்சல், செலவுகள் வரும். நிலம், சொத்து விஷயமாக யோசித்து செயல்படவும். நண்பர்களிடம் இருந்து சற்று விலகி  இருப்பது  நலம் தரும். உத்யோகத்தில் அலைச்சல், பயணங்கள் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் கை கொடுக்கும். பழைய இருப்புக் கள் விற்று தீரும்.  ஓட்டல், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், டீ கடை தொழில் செழிப்படையும்.

மகம்: சுபசெய்தி,

பூரம்: ஆலய தரிசனம்,

உத்திரம்: கவனம்  தேவை.

கன்னி

கன்னி: தனம், வாக்கு, குடும்பஸ்தானத்தில் கூட்டு கிரக சேர்க்கை இருப்பதால் சாதக, பாதகங்கள் இருக்கும். சுக்கிரன் பலம் காரணமாக எதையும் சமாளித்து   விடுவீர்கள். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்யம் எதிர்பார்க்கலாம். தொலைபேசி செய்தியால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாமியார் மூலம் மகிழ்ச்சியும்,  பரிசுகளும்  கிடைக்கும். காது, தொண்டை சம்பந்தமாக உபாதைகள் வந்து நீங்கும். எலக்ட்ரிகல் சாதனங்கள் செலவு வைக்கும். வார கடைசியில் பய ணங்கள் இருக்கும்.  உத்யோகத்தில் நிறை, குறைகள் இருக்கும். வேலைச்சுமை வந்து நீங்கும். வியாபாரம் சராசரியாக இருக்கும். வங்கியில் இருந்து  உதவிகள் கிடைக்கும். ரியல்  எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும்.

உத்திரம்: குதூகலம்,

அஸ்தம்: பயணங்கள்,

சித்திரை: உடல்  உபாதைகள்.

துலாம்

துலாம்: ராசிநாதன் சுக்கிரன், உச்சம் பெற்ற சனியுடன் இருப்பதால் தடைகள், ஏமாற்றங்கள் நீங்கும். வேலை சம்பந்தமாக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல  செய்தி  உண்டு. பண வரவு காரணமாக பழைய கடன்களை அடைப்பீர்கள். மாமன் வகை உறவுகளால் ஆதாயம் உண்டு. கணவன், மனைவி  இடையே நெருக்கம்  கூடும். குழந்தைகள் உடல்நலம் காரணமாக மருத்துவ செலவுகள் இருக்கும். அரசியல்வாதிகளின் எண்ணங்கள் நிறைவேறும்.  கல்வி வகையில் செலவுகள்  ஏற்படும். உத்யோகத்தில் சாதகமான நிலை இருக்கும். பொறுப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.  பணப்புழக்கம் உண்டு. வேலையாட்கள்  ஒத்துழைப்பார்கள். ஏஜெண்டுகள், புரோக்கர்களுக்கு நல்ல நேரம்.

சித்திரை: இனிக்கும் செய்தி,

சுவாதி: மருத்துவ செலவுகள்,

விசாகம்: அனுகூலம்.

விருச்சிகம்

விருச்சிகம்: திட, தைரிய, வீரியஸ்தான பலம் காரணமாக  உற்சாகமாக காணப்படுவீர்கள். செவ்வாய் பார்வை காரணமாக ஸ்திரமான முடிவு எடுப்பீர்கள். பெண் களுக்கு  பிறந்த வீட்டில் இருந்து மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. தந்தையுடன் ஏற்பட்ட மன கசப்புகள் மறையும். மாமியார் உடல்நலம் பாதிக்கப்படலாம்.  இடமாற்றம் சற்று  தாமதமாகலாம். கடல் கடந்து செல்வதற்கான நேரம் வந்துள்ளது. மகள், மாப்பிள்ளையால் திடீர் செலவுகள் வரும். உத்யோகத்தில்  ஏற்பட்ட மனக்குறைகள்  அகலும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.  காய், கனி, பூ வியாபாரம்  லாபகரமாக நடக்கும்.

விசாகம்: பொருள் வரவு,

அனுஷம்: நிறை-குறை,

கேட்டை: தாமதம்.

தனுசு

தனுசு: சூரியன், சுக்கிரன், சனி சாதகமாக இருப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். கையில் காசு, பணம் தாராளமாக புரளும். பெண்கள் விரும்பிய  ஆடை,  ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். சகோதர உறவுகளால் செலவுகள் இருக்கும். மருமகள் கர்ப்ப சம்பந்தமாக தித்திக்கும் செய்தி வரும்.  மின் அடுப்பு, மிக்சி  போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கு சம்பந்தமாக பயணங்கள் இருக்கும். கிரக பரிகார பூஜைகள், நேர்த்தி கடன்கள்  இனிதே நிறைவேறும்.  உத்யோகத்தில் ஏற்பட்ட மனஉளைச்சல் சரியாகும். உங்கள் எதிர்பார்ப்புகள் கூடிவரும். வியாபாரம் செழிப்படையும். பயணத் தால் லாபம் உண்டு. ஏலச்சீட்டு,  பைனான்ஸ் தொழில் சீராக இருக்கும்.

மூலம்: அலைச்சல்,

பூராடம்: ஆபரண சேர்க்கை,

உத்திராடம்: ஆலய தரிசனம்.

மகரம்

மகரம்: பணவரவுகள் நிறைவாக இருந்தாலும், தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு நீங்கும். சொத்து விஷயமாக முக்கிய முடிவுகள் உண்டாகும். தாத்தா, பாட்டி யிடம்  இருந்து உதவிகள் கிடைக்கும். கன்னி பெண்கள் சற்று நிதானமாக போவது நல்லது. உயர் பதவியில் இருக்கும் உறவினர் உதவுவார். தாயார்  உடல்நலத்தில்  கவனம் தேவை. செல்போன், லேப்-டாப் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி  உண்டு. அலுவலகத்தில்  உங்கள் உழைப்பிற்கும், திறமைக்கும் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். வியாபாரம் கை கொடுக்கும். வேலையாட்கள்  பிரச்னைகள் தீரும். செங்கல்,  மணல், சிமெண்ட் வியாபாரம் ஏற்ற, இறக்கம் இருக்கும்.

உத்திராடம்: கவனம் தேவை,

திருவோணம்: நல்ல தகவல்,

அவிட்டம்: உதவிகள்.

கும்பம்

கும்பம்: சுக, பாக்யஸ்தான அம்சங்கள் நிறைவாக இருப்பதால் மகிழ்ச்சி, குதூகலம் உண்டு. மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைவார்கள். தாய்  வழி  உறவுகளால் ஆதாயம் உண்டு. விருந்து, விழா என்று செலவுகள் கூடும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பூர்வீக  சொத்து  சம்பந்தமாக இழுபறிகள் நீங்கும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். வீடு கட்ட கேட்டிருந்த வங்கி கடன் கிடைக்கும். உத் யோகத்தில்  ஏற்பட்ட மனக்குறைகள் நீங்கும். பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும்.  பங்கு வர்த்தகத்தில்  உங்கள் கணிப்புகள் வெற்றியடையும்.

அவிட்டம்: செலவுகள்,

சதயம்: விருந்து விழா,

பூரட்டாதி: மாற்றங்கள்.

மீனம்

மீனம்: சாதக, பாதகங்கள், நிறை, குறைகள், வரவு, செலவுகள் உள்ள நேரம். எதிலும் நிதானம், கவனம் தேவை. வீண் பேச்சுக்களை குறைக்கவும். தாய்வழி   உறவுகளால் செலவு கள் ஏற்படும். சகோதரி திருமண விஷயமாக அலைச்சல், செலவுகள் உண்டாகும். பெண்களின் சேமிப்பு பணம் தங்க நகைகள £க மாறும்.  இடமாற்றம் சம்பந்தமாக முடிவுகள் மாறலாம். உயர்பதவியில் இருக்கும் நண்பர் உதவுவார். வார கடைசியில் பயணங்கள் இருக்கும். அலு வலகத்தில்  வேலைச்சுமை கூடும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் சீராக இருக்கும். பணப்பிரச்னைகள் தீரும். கம்ப்யூட்டர்,  எலக்ட்ரானிக்ஸ்,  செல்போன் உதிரிபாகங்கள் தொழில் சாதகமாக இருக்கும்.

பூரட்டாதி: சாதகம்,

உத்திரட்டாதி: செலவுகள்,

ரேவதி: பயணங்கள்.

Leave a Reply