விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் நடிகை வனிதா, முதலில் டிவி நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறார். பின்னர் கருத்து வேறுபடு காரணமாக ஆகாஷை பிரிந்த வனிதா, தொழிலதிபர் ஆனந்தராஜை பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஸ்ரீஹரி, தந்தை ஆகாஷுடன் சென்றுவிட்டார். இதனால்  விஜயகுமார் குடும்பத்தினர்களுக்கும் வனிதாவும் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

பின்னர் மகன் ஸ்ரீஹரிக்காக ஆனந்தராஜை விட்டு பிரிந்து வந்து மீண்டும் ஆகாஷுடன் இணைந்தார் வனிதா. இந்நிலையில் கவர்ச்சி நடிகை அல்போன்ஸாவின் தம்பியும், டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட்டுடன் அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பின்போது வனிதா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனால் ராபர்ட்டுடன் வனிதா சென்றால் ஸ்ரீஹரியை மறந்துவிட வேண்டும் என்று விஜயகுமார் மீண்டும் மிரட்டுவதால் வனிதா, தன்னுடைய மூன்றாவது திருமணத்தை பகிரங்கமாக தெரிவிக்காமல் ரகசியமாக பாதுகாத்து வருவதாக கூறபப்டுகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் ராஜ்கிரணின் ‘மாணிக்கம்’ என்ற படத்தில் அறிமுகமாகி விஜய்யுடன் சந்திரலேகா உள்பட பல படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். விரைவில் ராபர்ட்டுடன் இணைந்து ஒரு புதிய படம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply