shadow

வண்டலூர் பூங்க மிருகங்களின் நிலை என்ன? பூங்கா திடீர்  மூடல்

வர்தா புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேறோடு வீழ்ந்துள்ளதால் மின்சாரம் தடை காரணமாக இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வண்டலூர் பூங்காவிலும் பல மரங்கள் வேறுடன் சாய்ந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் உயிரிழல் பூங்கா முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால் மிருகங்களின் நிலை என்ன என்று அறிய முடியாமல் அதன் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் மிருகங்களின் நிலை தெரியும் வரையிலும், மறு அறிவிப்பு வரும் வரையிலும் பூங்காவை மூட நிர்வாகம் உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே வண்டலூர் பூங்காவிற்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply