shadow

‘வனமகன்’ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள்

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய ‘வனமகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 23ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டு ‘யூ’ சர்டிபிகேட் பெற்றுள்ளது. இதனால் இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கு சலுகையை பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் 134 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாரிக்கப்படுள்ளது. ‘பேராண்மை’ படத்திற்கு பின்னர் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி பழங்குடி இனமக்களில் ஒருவராக நடித்துள்ளார்.

ஜெயம் ரவி, சாயிஷா, வருண், தம்பிராமையா, பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திரு ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை ஏ.எல்.அழகப்பன் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மற்றும் சாயிஷா ஆடும் சிங்கிள் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply