shadow

வானதி ஸ்ரீனிவாசன்

நேற்று திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த விபி துரைசாமியை வரவேற்று பாஜக பிரபலம் வானதி ஸ்ரீனிவாசன் கூறியதாவது:

திராவிட இயக்கங்களில் இருந்த மூத்த தலைவர்கள் தேசியக் கட்சியான பாஜகவை தேர்ந்தெடுத்து இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் பாஜகவின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்

தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள், கட்சி தமிழகத்தில் எங்கு இருக்கிறது என கேள்வி கேட்பவர்களுக்கு எல்லாம் மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் முக்கிய நிர்வாகிகள் இணைவது சரியான பதில்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இவ்வாறு வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *