பொங்கலுக்கு வலிமை ரிலீஸ் இல்லையா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது

இந்த நிலையில் ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

ஏற்கனவே ’ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய திரைப்படங்களில் ரிலீஸ் செய்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

‘வலிமை’ படக்குழுவின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது