shadow

’வலிமை’ படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் இந்தபடத்தின் ஒரு நிமிட புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் ஏற்கனவே வெளியான சில காட்சிகளும் வெளியாகாத சில காட்சிகளும் உள்ளன. இதனையடுத்து இந்த வீடியோவும் வழக்கம்போல் வைரலாகி வருகிறது.

அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் பைக் சேசிங் காட்சிகள் ஆகியவை உள்ள இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.