‘வலிமை’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் பகல் நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

அந்த சமயத்தில் திரையரங்குகள் மால்கள் உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது

எனவே ஜனவரி மாதம் வெளியாகும் வலிமை உள்பட ஒரு சில பெரிய திரைப்படங்கள் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.