விமான விபத்தும் நிலச்சரிவும் ஒன்றா?

வைரமுத்துவுக்கு நெட்டிசன்கள் கேள்வி

சமீபத்தில் கேரளாவில் நிலச்சரிவு மற்றும் விமான விபத்து என இரண்டு இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்தன. இந்த இரண்டிலும் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தமிழக அரசியல்வாதிகள் சிலர் இந்த இரண்டையும் ஒப்பீட்டு தமிழர்கள் என்பதால் நிலச்சரிவு மீட்புப் பணியில் தாமதம் காட்டுவதாக குற்றம் சாட்டி வருகின்றார்கள் இந்த நிலையில் கவியரசு வைரமுத்து இதுகுறித்து தனது டுவிட்டரில்

விமான விபத்து மீட்சியைத்
திறம்பட நிகழ்த்திய கேரள
ஆட்சியைப் பாராட்டுகிறோம்.
அதேபோல் மண்ணில் புதைந்த
மக்களுக்கும் விரைந்த மீட்பும்
தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம்.
வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்;
மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப்
புரியாதா என்ன?

ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். ஆனால் நிலச்சரிவும், விமான விபத்தும் ஒன்றல்ல என்றும் நிலச்சரிவு மீட்புப்பணி கடினமானது என்றும் இதிலும் அரசியல் வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply