கருணாநிதி மறப்பார், முக ஸ்டாலின் மறக்க மாட்டார்: வைரமுத்து

கருணாநிதி மறப்பார், முக ஸ்டாலின் மறக்க மாட்டார்: வைரமுத்து

திமுக தலைவர் முக ஸ்டாலினையும், முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியையும் பலர் ஒப்பிட்டு பேசி வரும் நிலையில் கருணாநிதியையும், மு.க.ஸ்டாலினையும் ஒப்பிடக் கூடாது என்றும் இருவரின் தனித்தன்மைகளை வெவ்வேறு என்றும் கவிஞர் வைரமுத்து விழா ஒன்றில் பேசியுள்ளார்.

கருணாநிதி மறப்பார் மன்னிப்பார் என்றும், ஆனால் மு.க.ஸ்டாலின் மன்னித்தாலும் மறக்கமாட்டார் என்றும் கூறிய வைரமுத்து கருணாநிதிக்கு பின்னர் திமுக சிதறும் என்கிற எண்ணத்தை முறியடித்து முன்பைவிட வலுவாக மு.க.ஸ்டாலின் கட்சியை ஆக்கியுள்ளதாக புகழாரம் சூட்டினார்.

மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் சலசலப்புகள் ஏற்படாமல் பார்த்துகொண்டது திமுகவை முன்பைவிட வலிமையாக மு.க.ஸ்டாலின் ஆக்கியதற்கு உதாரணம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Leave a Reply