தமிழக முதல்வரை திடீரென சந்தித்த கவிஞர் வைரமுத்து!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை கவிஞர் வைரமுத்து அவர்கள் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத வகையில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நேற்று
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தேன்

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி
உங்கள் நல்லாட்சிக்குக் கிட்டிய நம்பிக்கை என்றேன்

வெற்றியில் ஆழ்வதுமில்லை;
தோல்வியில் வீழ்வதுமில்லை என்பதுதான்
ஆட்சியாளனுக்கு அழகு

அந்த அழகை
அவர்முகத்தில் கண்ணுற்றேன்

மகிழ்ந்தார்;