shadow

கமல், ரஜினி திடீர் புரட்சி செய்பவர்களா? வைகோ கிண்டல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களுக்க்கு பேட்டியளிக்கும்போது கமல், ரஜினி அரசியல் வருகையை கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்தது செய்தியாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது.

வைகோ இதுகுறித்து கூறியபோது, ‘எப்படி ஓட்டு போடுவதற்கு எல்லோருக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறதோ, அதேபோல கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது. என்னுடைய 54 வருட பொதுவாழ்க்கையில், 50 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று, கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறேன். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணமாகவும் சென்றிருக்கிறேன். 5 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறேன். மக்களைப் பற்றி நான் நன்றாக அறிவேன்.

கமலும் ரஜினியும், ஏதோ திடீர் புரட்சி செய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று முயல்கிறார்கள். அவர்கள் இருவரும் அப்படி என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்” என்று கூறியுள்ளார்

மதிமுக என்ற கட்சியை ஆரம்பித்து 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் டெபாசிட் பெறவே திணறிக்கொண்டிருக்கும் வைகோ அவர்கள் கமல், ரஜினி குறித்து பேசுவதற்கு தகுதியற்றவர் என்று கமல், ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply