shadow

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகத் தடை. ஜெயலலிதாவின் மெத்தனப்போக்கால் வந்த தீர்ப்பு. வைகோ
vaiko
அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகர் ஆக முடியாது என்றும் ஆகமவிதிமுறைகளை தெரிந்தவர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்றும் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தைதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு அரசியல் சட்டம் வகுத்துள்ள சமூக சமத்துவ உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதா அரசு பொறுப்பு ஏற்ற பின்னர்தான் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் மெத்தனப்போக்கு ஏற்பட்டதாகவும், இந்த வழக்கைத் துரிதப்படுத்தி, உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க விரும்பாத ஜெயலலிதா, இந்த வழக்கை இழுத்தடித்து காலதாமதம் செய்ததாகவும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தகர்த்துவிட்டதாகவும், எனவே, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

English Summary: Vaiko statement about priest appointment case judgement

Leave a Reply