shadow

விஜயகாந்தை மறைமுகமாக கிண்டலடித்த வைகோ

Vijayakanthகடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி இரண்டு திராவிட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஓரளவுக்காவது வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். குறிப்பாக விஜயகாந்தின் தேமுதிகவும், ஜி.கே.வாசனின் தமாகவும் இணைந்தவுடன் இந்த கூட்டணி வலுவானதாக கூறப்பட்டது. ஆனால் முடிவு அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது என்பது அறிந்ததே. தேர்தலுக்கு பின்னர் தேமுதிகவும், தமாகவும் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து கழண்டு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விழா ஒன்றில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ பேசியபோது ‘திருமாவளவன் முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, நாங்கள் மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கினோம். தமிழக அரசியல் அரங்கில் பல அதிர்வுகளை அந்தக் கூட்டணி உருவாக்கியது. ஆனால், தே.மு.தி.க-வும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் எங்கள் கூட்டணியில் இணைந்த பிறகு, நாங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டோம்; ஏகடியத்துக்கு ஆளானோம்’’ என்று கூறியபோது வைகோவின் மறைமுகக் கிண்டலுக்கு அரங்கில் சிரிப்பொலி.

தொடர்ந்து, ‘‘அதன் விளைவு மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. ஏனென்றால், போராளிகள் நாங்கள். யுத்தத்தைத்தான் இழந்திருக்கிறோம்; களத்தை இழக்கவில்லை. இன்னும் பல களங்கள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதில் நாங்கள் வெல்வோம்’ என்றார்.

Leave a Reply