shadow

வைகோவுக்கு இது தேவையா? 50 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் ஜாமீன் மனு தாக்கல்

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி விசாரணைக்குவந்தபோது வைகோவுக்குச் சிறைத் தண்டனை விதித்தது. அப்போது நீதிபதி வைகோவை ஜாமீனில் செல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டபோது தனக்கு ஜாமீன் தேவையில்லை என்று சூளுரைத்தார். இதையடுத்து, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அப்போதும் நீதிபதியிடம், தான் பிணையில் செல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்ததால், காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ. இதனால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வைகோவின் காவலை ஜூன் 2 ஆம் தேதி வரை நீட்டிப்புச் செய்தது.

இந்த நிலையில் 50நாள் சிறை வாசத்திற்கு பின்னர் தற்போது ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ளது.

Leave a Reply