ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 2வது படம் ‘வை ராஜா வை’. இந்த படத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு படத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள உல்லாச கப்பலில் பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். அதேபோன்ற ஒரு பிரமாண்டமான சிங்கப்பூர் கப்பலில் ‘வை ராஜா வை’ படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது. இந்த கப்பலின் பிரமாண்டம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் புதுமையாக இருக்கும் என இயக்குனர் ஐஸ்வர்யா கூறுகிறார்.

டாப்சி சம்மந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்று இந்த கப்பலில்தான் படமாக்கப்பட்டுள்ளது. இவர் தனுஷின் ஆடுகளம் படத்தில்தான் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வை ராஜா வை’ படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

Leave a Reply