என்ன ஆட்டம் போட்டதுங்க பக்கிங்க:

வைகைப்புயல் வடிவேலுவின் வீடியோ

கொரோனாவுக்கு முன் மனிதர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள். அந்த ஆட்டம் அனைத்தையும் கொரோனா நிறுத்திவிட்டது என்று வைகைப்புயல் வடிவேலு வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:

தற்போது நடந்துகொண்டிருப்பது ஒரு போர். உலக நாடுகள் அனைத்தும் அணுகுண்டுகள், ஆயுதங்களையெல்லாம் கைவிட்டுவிட வேண்டும். மருத்துவ உலகம் தலைதூக்கி நிற்கவேண்டும். தற்போது மருத்துவ உலகமே திணறிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் சொல்வதை கேட்டால் போதுமானது. அவர்கள் தான் நமக்கு கடவுள் போன்றவர்கள். வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அது கோடு, இது வீடு. ரோட்டை தாண்டியும் வரக்கூடாது என்று அரசு சொல்லிவிட்டது.

இந்த காலகட்டத்தில் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்கும் பாடம்தான் காலம் முழுவதும் அவர்கள் மனதில் நிலைத்திருக்கும். இதுதான் அதற்கான சரியான சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்துள்ளார். யாருக்கும் கை கொடுக்கக்கூடாது, முத்தம் கொடுக்க வந்தால் அனுமதிக்கக் கூடாது போன்ற விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்கள் பிற்காலத்தில் எவ்வளவு பெரிய அதிகாரிகளாக ஆனாலும் அவர்களுக்கு இப்போது சொல்லிக்கொடுக்கும் விஷயம் மனதில் இருக்கும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கடவுள் வழங்கியுள்ளார். அதை பயன்படுத்தி அவர்களை நல்லபடியாக வளர்த்து விட வேண்டும்.

இவ்வாறு வடிவேலு பேசியுள்ளார்.

https://twitter.com/VadiveluOffl/status/1253352538407043073

Leave a Reply