விவேக் மறைவால் கண்ணீர் சிந்திய வடிவேலு!

நடிகர் விவேக் மறைவு குறித்து நடிகர் வடிவேலு வெளியிட்ட வீடியோவில் கண்ணீருடன் கூறியதாவது:

விவேக்கை பற்றி பேசும் போது எனக்கு துக்கம் தொண்டையை அடைக்குது. ரொம்ப நல்லவன். சமூக சிந்தனை அதிகமாக இருக்கும். அப்துல் கலாம் அய்யா அவர்களிடம் நெருக்கத்துடன் இருந்தவர். அதேபோல் விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது இப்படி எவ்வளவோ விஷயங்களை அவர் செய்துள்ளார்.

ரொம்ப உரிமையாக என்னிடம் பழகுவார். என்னை பெயர் சொல்லி தான் அவர் அழைப்பார். அவரை மாதிரி ஓபனாக பேசக்கூடிய ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்கள் எனக்கு இருந்தாலும் நான் அவருக்கு ரசிகன். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியும் படி இருக்கும். என்னைவிட எதார்த்தமாக எளிமையாக பேசுவார். அவரை இறந்துவிட்டார் என்பதை கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. என்னால் முடியவில்லை. இந்த நேரத்தில் என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை

அவரை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்த என்னால் முடியவில்லை. நான் மதுரையில் இருக்கின்றேன். விவேக்கிற்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் தைரியமாக இருக்க வேண்டும். யாரும் மனதை விட்டு விடக்கூடாது. விவேக் எங்கேயும் போகவில்லை, உங்களுடன்தான் இருக்கிறார். மக்களோடு மக்களோடு நிறைந்திருக்கின்றார். அவரது ஆன்மா நல்லபடியாக சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு வடிவேலு அந்த வீடியோவில் கூறியுள்ளார்

Leave a Reply