அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது: ரஜினியின் அரசியல் குறித்து நடிகர் வடிவேலு

அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது: ரஜினியின் அரசியல் குறித்து நடிகர் வடிவேலு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிக்கு பின்னர் அவர் அரசியலுக்கு வருவாரா? அரசியலில் இருந்து பின்வாங்கி விட்டாரா? பயந்து விட்டாரா? என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் ரஜினியுடன் பல திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் கூறியபோது ’ரஜினி கட்சி ஆரம்பிக்கின்றாரா? இல்லையா? என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது

இருப்பினும் கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற அவரின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். வடிவேலுவின் இன்று கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

Leave a Reply