வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.

இந்த படம் சென்சாருக்கு சென்றதாக கூறப்படும் நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது

வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சுராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வடிவேலுவுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.