shadow

விஜய்யுடன் மீண்டும் இணைந்த வடிவேலு

கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ‘காவலன்’ படத்திற்கு பின்னர் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் ‘தளபதி 61’ படத்தில் வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் விஜய், வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ‘தளபதி 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் சென்னையில் இன்று முதல் தொடங்கியுள்ளது. விஜய், காஜல் அகர்வால், வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி தீம் பார்க்கில் நடந்து வருகிறது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் என்ற பெருமையை பெற்ற இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அட்லி இயக்கி வரும் இந்த படத்திற்குஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *