shadow

மீண்டும் இணையும் வடிவேலு. அறிமுக கேமிராமேன். அதிர வைக்கும் ‘விஜய் 61’

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘பைரவா’ கடும் போட்டிகளுக்கு இடையே பொங்கல் திருநாளில் வெளிவரும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘விஜய் 61’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

முதலில் இந்த படத்தின் எடிட்டராக அந்தோணி ரூபன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விஷ்ணு என்பவர் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆறு வருடங்களுக்கு பின்னர் அதாவது ‘காவலன்’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு.

விஜய் 61′ படத்தின் டீம் வித்தியாசமாக அமைந்து வருவதால் இப்போதே இந்த படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து உல்ளது

Leave a Reply