shadow

வைகைப்புயல் வடிவேலுக்கு மாலை மரியாதை செய்த மாரி செல்வராஜ் குறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள மாமன்னன் என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும், மேலும் இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் இன்று முதல் மாமன்னன் படப்பிடிப்பில் வடிவேலு இணைந்து கொண்டதை அடுத்து அவரை மாலை அணிவித்து மாரி செல்வராஜ் மரியாதை தெரிவித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது