திடீரென லண்டனுக்கு சென்ற வடிவேலு: என்ன காரணம்?

vadivelu

வைகைப்புயல் வடிவேலு திடீரென லண்டனுக்கு சென்றுள்ளதாக வெளியாகியுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் சுராஜ் உடன் நடிகர் வடிவேலு லண்டனில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது

இதனை அடுத்து ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற உள்ளதாகவும் முழுக்க முழுக்க இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.