shadow

வடசென்னை’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு
vadachennai
கோலிவுட் திரையுலகின் பிசியான நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் ஏற்கனவே ‘தொடரி’ மற்றும் ‘கொடி’ ஆகிய இரண்டு படங்களை நடித்து முடித்துள்ளார். இந்த படங்களின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கவுதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமீபத்தில் தனுஷ் தனது டுவிட்டரில் தான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்று அறிவித்தார். ஆனால் தற்போது ‘வடசென்னை’ படத்தை தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வரும் ஜூன் மாதம் 5ஆம் தேதி முதல் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் இந்த படத்திற்கு பின்னரே கார்த்திக் சுப்புராஜ் படம் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், சமந்தா நடிக்கவுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ மற்றும் ‘ஆடுகளம்’ ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply