மேஷம்

ஏற்றத்தாழ்வுகளை கண்டு கலங்காதவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கனிவாகவும், இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சரியில்லாததால் தூக்கம் குறையும். தலைச்சுற்றல், யூரினரி இன்பெக்ஷன், தோலில் அலர்ஜி வந்து நீங்கும். 8-ந் தேதி முதல் செவ்வாயும் 5-ல் நுழைவதால் அடிவயிற்றில் வலி, வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை அதிசயிக்கும் படி சிலவற்றை செய்வீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். விட்டுக் கொடுக்கும் மனசால் வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 7, 11, 12 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க் அதி‌ர்ஷ்ட திசை: தென்மேற்கு

ரிஷபம்

நினைத்ததை முடிக்கும் மனோ சக்தி கொண்டவர்களே! ராசிக்கு 6-ம் வீட்டில் சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் சளைக்காமல் போராடும் சக்தி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். புது வேலைக் கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமாநிலத்தை சேர்ந்த நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சூரியன் 5-ல் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் பகைமை வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்புகள் நீங்கும். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள் என்றாலும் அதிகாரிகளால் பிரச்னைகள் வரும். மூளை பலத்தால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 8, 9, 13 அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், க்ரீம் வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை: தெற்கு
மிதுனம்

மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்பவர்களே! புதன் உங்களுக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் ரசனை மாறும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். நட்பு வகையில் ஆதாயம் உண்டு. 7-ந் தேதி வரை முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், தவிர்க்க முடியாத செலவுகளும் வந்துச் செல்லும். 8-ந் தேதி முதல் செவ்வாய் சாதகமாவதால் முன்கோபம், சொத்து சிக்கல்கள், சகோதர வகையில் இருந்த அலைச்சல் யாவும் நீங்கும். குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் யாரும் தன்னை மதிப்பதில்லை, சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். முன்பின் அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்‌தியோகத்தில் சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். கால நேரம் கருதி செயல்பட வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 7, 9, 11 அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை: வடக்கு

கடகம்

ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்ந்தவர்களே! சூரியன் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமதத்தவர்களால் உதவிகள் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். ராகுவும், சனியும் பலவீனமாக இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், படபடப்பு, எந்த வேலையை எடுத்தாலும் ஒருவித சலிப்பு வந்து நீங்கும். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்‌தியோகத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். மனஉறுதியால் வெல்லும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 9, 10, 11 அதி‌ர்ஷ்ட எண்கள்: 5, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மெரூண், மயில்நீலம் அதி‌ர்ஷ்ட திசை: தென்மேற்கு
சிம்மம்

நம்பிக்கையுடன் போராடி முதலிடம் பிடிப்பவர்களே! குருபகவான் ராசிக்கு லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். அடிப்படை வசதிகளை உயர்த்த முயற்சி செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று உங்கள் ரசனைக் கேற்ப வீடு வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். ராசிநாதன் சூரியன் 2-ல் நிற்பதால் கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அநாவசியப் பேச்சை தவிர்க்கப்பாருங்கள். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்‌தியோகத்தல் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வாக்குசாதுர்யத்தால் வளர்ச்சியடையும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 10, 12, 14 அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளம்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை: வடமேற்கு

கன்னி

தன் உழைப்பில் மற்றவர்களை வாழ வைப்பவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வங்கி லோன் கிடைக்கும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். மனைவிவழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், சனியும் தொடர்வதுடன் 8-ல் கேதுவும் நிற்பதால் வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சூரியன் உங்கள் ராசிக்குள் நிற்பதுடன் செவ்வாயும் 8-ந் தேதி முதல் 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள், அலைச்சல், தூக்கமின்மை, தலை வலி வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை சகாக்கள் மத்தியில் விமர்சித்து பேச வேண்டாம். கன்னிப் பெண்களே! கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். உத்‌தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். விடாமுயற்சியால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 8, 10, 12 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை: கிழக்கு

 துலாம்

எதிலும் புதுமையை விரும்புபவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால் தடைகள் நீங்கும். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமைவார். மகளுக்கு வேலைக் கிடைக்கும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். சூரியன் உங்கள் ராசிக்கு 12-ல் நிற்பதால் முன்கோபம், உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, வேனல் கட்டி வந்துச் செல்லும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப்பாருங்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள். கன்னிப் பெண்களே! பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அலுத்துக் கொள்ளாமல் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு உழைக்க வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 9, 10, 12 அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை அதி‌ர்ஷ்ட திசை: வடக்கு

விருச்சிகம்

கடுமையாக பேசினாலும் அடிமனதில் நேசிப்பவர்களே! செவ்வாய் 8-ந் தேதி முதல் 10-ல் நுழைவதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வி. ஐ. பிகளுக்கு நெருக்கமாவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி குடும்ப வருமானத்தை உயர்த்த சில ஆலோசனைகள் வழங்குவார். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்‌தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். ராகுவும், சனியும் 12-ல் மறைந்திருப்பதால் செல்வதால் சிறுசிறு அறுவை சிகிச்சை, ஈகோ பிரச்னை, பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்‌தியோகத்தில் எதிராக இருந்த அதிகாரி மாற்றலாவார். சில ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்துப் பேசுவீர்கள். புதிய கோணத்தில் யோசித்து வெற்றி பெறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 11, 12, 13 அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை: மேற்கு

தனுசு

விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் செய்பவர்களே! ராசிநாதன் குரு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பணவரவு உண்டு. மனைவிவழியில் மதிப்புக் கூடும். 8-ந் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சொத்துப் பிரச்னை தீரும். சகோதர வகையில் இருந்த சலசலப்புகள் நீங்கும். சூரியன் 10-ல் தொடர்வதால் புது வேலை அமையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். வீடு கட்ட சி. எம். டி. ஏ. , எம். எம். டி. ஏ அப்ரூவலாகி வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். தொகுதி மக்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்‌தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையின் சூட்சுமத்தை உணரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 7, 9, 13 அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: கிளிப்பச்சை, ஆரஞ்சு அதி‌ர்ஷ்ட திசை: கிழக்கு

மகரம்

தொலை நோக்குச் சிந்தனை உள்ளவர்களே! உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்ரன் செல்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பழைய இடத்தை நல்ல விலைக்கு விற்று புது வீடு வாங்குவீர்கள். தள்ளிப் போன கல்யாணம் நிச்சயமாகும். எதிர்பார்த்த உதவிகள் வி. ஐ. பிகளிடமிருந்து கிடைக்கும். பிள்ளைகள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். 8-ந் தேதி முதல் செவ்வாய் ராசிக்கு 8-ல் அமர்வதால் சிறுசிறு நெருப்பு காயங்கள், வாகன விபத்துகள், முதுகு, மூட்டு வலி வந்துச் செல்லும். சகோதரங்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. ராகுவும், சனியும் சாதகமாக இல்லாததால் மறைமுக எதிர்ப்புகள், உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்நீச்சல் போட்டு கரையேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 8, 10, 11 அதி‌ர்ஷ்ட எண்கள்: 5, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வெளீர்நீலம் அதி‌ர்ஷ்ட திசை: தென்மேற்கு

கும்பம்

ஆர்பாட்டமில்லாமல் சாதித்துக் காட்டுபவர்களே! சுக்ரனும், புதனும் உங்கள் ராசிக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பணவரவு திருப்தி தரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பூர்வீக சொத்தை புதுபிப்பீர்கள். மகளுக்கு கல்யாணம் நிச்சயமாகும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ராசிநாதன் சனிபகவான் ராகுவுடன் நிற்பதால் பழைய கசப்பான சம்பவங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! திறமையான வகையில் செயல்படுவீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்‌தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அனுபவ அறிவால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 7, 9, 13 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை: வடகிழக்கு
மீனம்

பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்களே! 8-ந் தேதி முதல் செவ்வாய் 6-ம் வீட்டில் நுழைவதால் எதிர்ப்புகள் அடங்கும். ராஜ தந்திரமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். கார் பழுதை சரி செய்வீர்கள். பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ராகுவும், சனியும் 8-ல் நிற்பதால் பிறர் மீது நம்பிக்கையின்மை, கனவுத் தொல்லை, திடீர் பயணங்கள், வீண் செலவுகள் வந்துச் செல்லும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் திட்டத்தை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்‌தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். வளைந்தால் வாழ்வு உண்டு என்பதை உணரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 9, 12, 13 அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் அதி‌ர்ஷ்ட திசை: மேற்கு

 

Leave a Reply