மேஷம்
எங்கும் எப்போதும் உண்மையையும், யதார்த்தத்தையும் விரும்பும் நீங்கள் பரந்த மனசுக்கு சொந்தக்காரர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உறவினர்கள் ஏதேனும் விமர்சித்தால் கோபப்படாதீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. சூரியன் நீசமாகி நிற்பதால் தூக்கம் குறையும். பிள்ளைகளாலும் அலைச்சல், செலவினங்கள் அதிகமாகும். பிற்பகுதியில் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! தலைமைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் அதிக முதலீடுகள் வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரருடன் கருத்து மோதல் வரும். உத்‌தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். பிரபலங்களால் பாராட்டப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம் அதி‌ர்ஷ்ட திசை: வடமேற்கு

ரிஷபம்
யாரையும் பகைத்துக் கொள்வதை விரும்பாத நீங்கள் அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களை எப்படிக் கேட்டாலும் சொல்ல மாட்டீர்கள். சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் அழகு, ஆரோக்யம் கூடும். தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். ஷேர் மூலம் பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். உடல் நிலை சீராகும். சுகாதிபதி சூரியன் வலுவிழந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். பெற்றோருடன் மனத்தாங்கல் வரும். வீடு மாறுவீர்கள். வாகனம் அவ்வப்போது பழுதாகும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப்பிடியுங்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், கன்ஸ்டக்ஷன் வகைகளால் லாபம் உண்டு. உத்‌தியோகத்தில் சிறுசிறு அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். புத்திசாலித்தனத்தை விட பொறுமைத் தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 31, 1, 3 அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆரஞ்சு அதி‌ர்ஷ்ட திசை: மேற்கு

மிதுனம்
விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம் என எதிலும் மிதமாக இருக்கும் நீங்கள், பகுத்தறிவுவாதிகள். 30-ந் தேதி வரை சுக்ரன் மறைந்து நிற்பதால் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். சிறுசிறு வாகன விபத்துகள், குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். 31-ந் தேதி முதல் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அலைச்சல், டென்ஷன் குறையும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். முக்கிய விஷயங்களை இருவரும் கலந்தாலோசிப்பீர்கள். புதன் வக்ரமாகி இருப்பதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். வேற்றுமொழியினரால் லாபம் உண்டு. உத்‌தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்து நல்ல பெயர் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். தன்னம்பிக்கையால் உயரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 30, 2 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளம்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை: தென்கிழக்கு

கடகம்
எதையும் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், அநாவசியமாக பேசுவதை விரும்பமாட்டீர்கள். ராசிநாதன் சந்திரன் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். 2-ல் நிற்கும் செவ்வாய் சேமிப்புகளை கரைப்பார். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்கப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கசப்பான சம்பவங்களை பேசினால் பொறுத்துப் போவது நல்லது. உறவினர்கள் ஆதரவாக இருப்பார். சொத்துப் பிரச்னை சுமூகமாக முடியும். பள்ளிப் பருவ நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்யடைவீர்கள். கூடாபழக்க வழக்கங்களை தவிர்த்துவிடுங்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யப்பாருங்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்‌தியோகத்தில் இடமாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். எதிர்நீச்சல் போடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை: வடகிழக்கு

சிம்மம்
சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட நீங்கள் அவ்வப்போது அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் பலவீனமாக இருப்பதால் கை, கால் வலி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அவ்வப்போது எழும் எதிர்மறை எண்ணங்களை தியானம் மூலம் சரிப்படுத்துங்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். எடைமிகுந்த பொருட்களை தூக்க வேண்டாம். சுக்ரன் சாதகமாக இருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்டுவதற்கு லோன் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வகையில் அலைச்சல் அதிகமாகும். மூத்த சகோதரி உதவுவார். மகனுக்கு வேலைக் கிடைக்கும். மகளின் கோபம் குறையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு நீங்கள் நண்பர்களாவீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் நெருக்கடி வந்து நீங்கும். உத்‌தியோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் கடின உழைப்பால் அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள். புதிய பாதையில் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 1, 2 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், மயில்நீலம் அதி‌ர்ஷ்ட திசை: தென்கிழக்கு

கன்னி
பள்ளிப் பருவத்திலேயே வைராக்கியத்துடன் எதையும் செய்து முடிக்கும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென பேசும் பழக்கம் உடையவர்கள். யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். ஓரளவு பணம் வரும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். செவ்வாய் மறைந்திருப்பதால் தூக்கம் குறையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். வாயுப் பதார்த்தங்கள் உணவில் வேண்டாமே. அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்‌தியோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றி சக ஊழியர்களிடம் விமர்சிக்க வேண்டாம். இடம், பொருள் ஏவலறிந்து பேச வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 29, 3 அதி‌ர்ஷ்ட எண்கள்: 6, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: நீலம், மெரூண் அதி‌ர்ஷ்ட திசை: தெற்கு

துலாம்
தெளிந்த நீரோடை போல தீர்க்கமாக முடிவெடுக்கும் நீங்கள் யார் மனசும் புண்படாதபடி பேசுவீர்கள். குருவின் பார்வையால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும். அனுபவ அறிவு அதிகமுள்ளவர்களின் அறிமுகத்தால் நிம்மதி கூடும். பேச்சை நீங்களே குறைப்பீர்கள். பல் வலி, கண் வலி வந்து நீங்கும். ஒய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும். உங்கள் புதிய முயற்சிகள் பலிதமாகும். உறவினர், நண்பர்களால் சுபச் செலவுகள் வந்துப் போகும். சகோதரர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். முன்கோபத்தால் பழைய நட்பை இழந்துவிடாதீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் தொந்தரவுகள் வந்து நீங்கும். உத்‌தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரிகள் மதிப்பார்கள். சமயோஜித புத்தியால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 3 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, பிங்க் அதி‌ர்ஷ்ட திசை: தென்கிழக்கு

விருச்சிகம்
கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமையை விரும்புவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். என்றாலும் எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். முன்கோபத்தை குறையுங்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். பிள்ளைகளிடமிருந்த பிடிவாத குணம் மாறும். மூத்த சகோதரி ஆதரவாகப் பேசுவார். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பிரபலங்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். சளித் தொந்தரவு அதிகமாகும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாளுவது நல்லது. உத்‌தியோகத்தில் வேலைச்சுமையும், வீண் பழியும் வந்து நீங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள்: 7, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, பழுப்பு அதி‌ர்ஷ்ட திசை: வடக்கு

தனுசு
மனிதநேயம் அதிகமுடைய நீங்கள் மன்னிக்கும் குணமுள்ளவர்கள். ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால் தொட்டது துலங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சகோதரங்களுடன் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக் கேற்ப அமையும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் கோபம் குறையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரியின் பிரச்னையை சுமூகமாக தீர்ப்பீர்கள். வீட்டில் இருந்தபடியே கமிஷன் வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். 28-ந் தேதி எதிலும் அவசரப்பட வேண்டாம். அரசியல்வாதிகளே! பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்‌தியோகத்தில் எதிர்த்த அதிகாரி மாற்றப்படுவார். புதிய பொறுப்புகள் கூடி வரும். நீண்ட நாள் கனவு நனவாகும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 29, 1, 3 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், க்ரீம் வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை: தெற்கு

மகரம்
தாராள மனசும், தயாள குணமும் கொண்ட நீங்கள், பழைய கலைப் பொருட்களை பாதுகாப்பவர்கள். சுக்ரன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மனஇறுக்கங்கள் ஓரளவு குறையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். கடன் வாங்கி செலவு செய்தாலும் பணப்பற்றாக்குறையால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். சூரியன் 10-ல் நின்றாலும் ராகு, சனியுடன் நீசமாகி அமர்ந்திருப்பதால் மறைமுக எதிர்ப்புகள், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். செவ்வாயும் 8-ல் தொடர்வதால் வாகனத்தில் செல்லும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். 29, 30 ஆகிய தேதிகளில் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழங்குங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்‌தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். விட்டுக் கொடுக்க வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 2, 3 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: வைலெட், மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை: மேற்கு

கும்பம்
எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்துவிட்டால் பதுங்கமாட்டீர்கள். 5-ல் நிற்கும் குருவும், 3-ல் இருக்கும் கேதுவும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சலை தருவார்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புதன் வக்ரமாகி 8-ல் மறைந்திருப்பதால் அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப்பாருங்கள். ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். 31, 1 மற்றும் 2-ந் தேதி மதியம் 1 மணி வரை வேலைச்சுமை அதிகமாகும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் பார்வை உங்கள் மீது திரும்பும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்‌தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அதிகாரி உங்களை மதிப்பார். அடிப்படை வசதிகள் உயரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 29, 30 அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, கிளிப்பச்சை அதி‌ர்ஷ்ட திசை: தென்மேற்கு

மீனம்
மென்மையையும், மேன்மையையும் விரும்பும் நீங்கள், தவறு செய்பவர்களைக் கண்டால் வன்மையாகக் கண்டிப்பீர்கள். செவ்வாய் வலுவாக இருப்பதால் எதிர்ப்புகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். குழம்பிக் கொண்டிருந்த விஷயத்தில் தெளிவான முடிவெடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுமூகமாக முடியும். வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். 2-ந் தேதி மதியம் 1 மணி முதல் 3 ஆகிய தேதிகளில் வீண் டென்ஷன் வந்துப் போகும். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர், நண்பர்களால் அன்புத்தொல்லைகள் இருக்கும். 8-ல் ராகுவும், சனியும் தொடர்வதால் காரியம் ஆகும் வரை உங்களை எல்லோரும் பயன்படுத்திக் கொண்டு விலகுகிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் சாட்சி கையப்பமிட வேண்டாம். அரசியல்வாதிகளே! சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை தருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்‌தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறொருவர் உரிமைக் கொண்டாடுவார். புதிய நட்பால் முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 28, 30, 31 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: பிங்க், மிண்ட்கிரே அதி‌ர்ஷ்ட திசை: கிழக்கு

Leave a Reply