மேஷம்
மனித நேயம் அதிகம் உள்ளவர்களே! உங்களின் தனாதிபதி சுக்ரனும், ராசிநாதன் செவ்வாயும் சாதகமாக இருப்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் வெகுநாட்களுக்குப் பிறகு பழைய சொந்தங்களை சந்திப்பீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புது வேலை அமையும். சூரியன் 9 – ம் வீட்டில் நிற்பதால் வீண் செலவு, அலைச்சல், தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். ராசிக்குள் கேதுவும், ராகு 7 – ம் வீட்டிலும் நிற்பதால் சிறுசிறு விபத்து, திடீர் பயணங்கள், வீண் டென்ஷன் வந்துச் செல்லும். கன்னிப்பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகளே! எதிர்பார்த்த வேலைகள் தடைப்பட்டு முடியும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை முடிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 24, 25, 26 அதிர்ஷ்ட எண்கள் : 7, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், ரோஸ் அதிர்ஷ்ட திசை : கிழக்கு

ரிஷபம்
உழைப்பால் உயர்ந்தவர்களே! புதன் சாதகமாக இருப்பதால் மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். ராகுவும், சனியும் வலுவாக இருப்பதால் புது வேலைக் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வீடு கட்ட லோன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும். ஆனால் சூரியன் 8 – ல் நிற்பதால் உஷ்ணத்தால் வயிற்று வலி, நெஞ்சு மற்றும் பல் வலி, மறைமுக அவமானம் வந்து நீங்கும். செவ்வாயின் போக்கு சரியில்லாததால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் சிறுசிறு ஏமாற்றம் வந்துப் போகும். மின்சார சாதனங்களை கையாளும் போது நிதானம் அவசியம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வாகனம் தொந்தரவு தரும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். வியாபாரத்தில் புது மாற்றங்கள் செய்வீர்கள். லாபம் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புதிய பாதை தென்படும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 25, 27, 28 அதிர்ஷ்ட எண்கள் : 4, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

மிதுனம்
அதிமேதாவித்தனம் அதிகம் உள்ளவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரிக்கு வேலைக் கிடைக்கும். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சனியும், ராகுவும் 5 – ம் வீட்டில் நிற்பதால் வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். 7 – ல் சூரியன் நிற்பதால் தூக்கமின்மை, பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். கன்னிப் பெண்களே! வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடை, ஆபரணம் சேரும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். ஜென்ம குரு தொடர்வதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, மனஇறுக்கம், உங்களைப் பற்றிய வதந்திகளெல்லாம் வந்துப் போகும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 27, 28, 29 அதிர்ஷ்ட எண்கள் : 3, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன் அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

கடகம்
தோல்வி கண்டு துவளாதவர்களே! தனாதிபதி சூரியன் சாதகமாக இருப்பதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். யோகாதிபதி செவ்வாய் 3 – ல் நிற்பதால் சொத்து சேரும். வழக்கு சாதகமாகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும். சுற்றுலா பயணம் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! புதிய முயற்சிகள் பலிதமாகும். புதன் 6 – ல் மறைந்திருப்பதால் பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். குரு 12 – ல் மறைந்திருப்பதால் மறைமுக விமர்சனம், திடீர் பயணங்கள், தூக்கமின்மை, பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மேலதிகாரியால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். விடா முயற்சியால் வெற்றி பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 23, 25, 27 அதிர்ஷ்ட எண்கள் : 2, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், நீலம் அதிர்ஷ்ட திசை : மேற்கு

சிம்மம்
அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதி குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்-. குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய நகை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சூரியன் 5 – ல் நிற்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சுக்ரன் 6 – ல் மறைந்திருப்பதால் மனைவியுடன் மோதல்கள், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துக்ள வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். சமயோஜித புத்தியால் சாதிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 25, 26, 29 அதிர்ஷ்ட எண்கள் : 3, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, ப்ரவுன் அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

கன்னி
கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்-. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார். செவ்வாயின் போக்கு சரியில்லாததால் சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள். சகோதர பகை, சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். வழக்கில் அவசரம் வேண்டாம். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். கன்னிப் பெண்களே! மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை வந்து விலகும். அரசில்வாதிகளே! தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத்தீர்க்க புதிய சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 27, 28, 29 அதிர்ஷ்ட எண்கள் : 2, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்நீலம், ஆரஞ்சு அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

துலாம்
கைமாறு கருதாமல் உதவுபவர்களே! உங்களின் சேவகாதிபதி குருபகவான் 9 – ல் அமர்ந்திருப்பதால் சாதிப்பீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். தூரத்து உறவினர்களை சந்திப்பீர்கள். ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால் மனைவிவழியில் இருந்த மோதல்கள் விலகும். வாகன வசதிப் பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். ராசிக்குள் ராகுவும், சனியும் தொடர்வதால் உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். செவ்வாய் 12 – ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், வாகன விபத்துகள், வீண் செலவுகள், தலைச்சுற்றல், கண் வலி வந்துப் போகும். கன்னிப்பெண்களே! கல்யாணம் ஏற்படாகும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். பட்ட மரம் துளிர்க்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 23, 24, 26 அதிர்ஷ்ட எண்கள் : 3, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : கிளிப்பச்சை, ஊதா அதிர்ஷ்ட திசை : மேற்கு

விருச்சிகம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்படுபவர்களே! ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பிரச்சனைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். யோகா, தியானம் செய்வதால் நிம்மதி கிட்டும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ராகுவும், சனியும் ராசிக்கு 12 – ம் வீட்டில் மறைந்திருப்பதால் மனதில் இனம்புரியாத பயம், முன்கோபம், கால் வலி, உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். 8- ல் குரு யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். அரசு விவகாரங்களில் அவசரம் வேண்டாம். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்கள் கசியாமல் பார்த்ததுக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அந்தஸ்து ஒருபடி உயரும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 23, 26, 28 அதிர்ஷ்ட எண்கள் : 1, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், சில்வர்கிரே அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

தனுசு
சுய கட்டுபாடுடையவர்களே! சனியும், ராகுவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனைவியின் உடல் நலம் சீராகும். ஷேர் மூலம் பணம் வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார். டி. வி. , ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். புது வாய்ப்புகளும் வரும். தொட்ட காரியங்கள் துலங்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 24, 25, 27 அதிர்ஷ்ட எண்கள் : 6, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ஆலிவ்பச்சை அதிர்ஷ்ட திசை : தெற்கு

மகரம்
பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! யோகாதிபதி சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் கற்பனை வளம் பெருகும். முகப்பொலிவுக் கூடும். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த உறவினரை சந்திப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். குருபகவான் 6 – ல் அமர்ந்திருப்பதால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சூரியன் 12 – ல் மறைந்திருப்பதால் முன்கோபம், மனக்குழப்பம், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி சகாக்கள் மத்தியில் விமர்சித்து பேசாதீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் தகுதிக் கேற்ப நல்ல நிறுவனத்தில் புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 25, 26, 27 அதிர்ஷ்ட எண்கள் : 3, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கிரே அதிர்ஷ்ட திசை : வடக்கு

கும்பம்
எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். திடீர் பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. செவ்வாய் 8 – ல் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னை வெடிக்கும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். வேலைக் கிடைக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 23, 27, 29 அதிர்ஷ்ட எண்கள் : 1, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை அதிர்ஷ்ட திசை : மேற்கு

மீனம்
தளராத தன்னம்பிக்கை உடையவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால் குழம்பியிருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். வீடு கட்டும் பணி முழுமையடையும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் விலகி நின்ற சொந்தம் விரும்பி வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பள்ளிக் கல்லூரிக் கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சனியும், ராகுவும் 8 – ல் நிற்பதால் எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்டப் பெயர்தானே மிஞ்சுகிறது என்று ஆதங்கப்படுவீர்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 23, 25, 26 அதிர்ஷ்ட எண்கள் : 4, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், மெரூண் அதிர்ஷ்ட திசை : கிழக்கு

Leave a Reply