மேஷம்
அனுசரித்து போகும் குணம் கொண்டவர்களே! பலவீனமாக இருந்த உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலம் பெற்று சூரியன் வீட்டில் நுழைந்திருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். சோர்வு, களைப்பு நீங்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்துக் கொண்டால் நிம்மதியாக இருக்கலாம் என நினைப்பீர்ளள். காது, தொண்டை வலிக்கும். பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜை மாற்றுவீர்கள். 18-ந் தேதி முதல் சூரியன் நீசமாவதால் வேலைச்சுமை கூடும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அரசு காரியங்கள் தடைபடும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்தை சீர் செய்ய அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்‌தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். மதிப்பு, மரியாதைக் கூடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 15, 17, 19 அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மெரூண், பிஸ்தாபச்சை அதி‌ர்ஷ்ட திசை: கிழக்கு

ரிஷபம்
எங்கும் எதிலும் வெற்றியை விரும்புபவர்களே! குருவும், சனியும் சாதகமாக இருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். பிள்ளைகளால் கொஞ்சம் கோபப்படுவீர்கள். கடந்த கால இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள். வழக்கு சாதகமாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சகோதரங்கள் உதவுவார்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வேலைக் கிடைக்கும். பெற்றோருடன் கருத்து மோதல் வரும். 18-ந் தேதி முதல் சூரியன் 6-ல் நுழைந்தாலும் நீசமாவதால் மறைமுக எதிர்ப்பு, வேனல் கட்டி, காரியத் தாமதம் வந்து நீங்கும். அரசு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! உயாகல்வியில் ஆர்வம் பிறக்கும். காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 10-ந் தேதி மதியம் 1. 30 முதல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். உத்‌தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 14, 16, 18 அதி‌ர்ஷ்ட எண்கள்: 7. 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை: வடகிழக்கு

மிதுனம்
பழைய சம்பவங்களை மறக்காதவர்களே! 3-ல் நிற்கும் செவ்வாயால் ஆளுமைத் திறன் அதிகமாகும். உங்கள் ஆலோசனைகளை குடும்பத்தில் ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனைப் பைசல் செய்ய சில வழிகள் தெரியும். அரசால் ஆதாயம் உண்டு. சுக்ரன் பலவீனமாக இருப்பதால் சிறுசிறு விபத்துகளும் வரும். குடி நீர் குழாய் அடைப்பு போன்ற வீடு பராமரிப்புச் செலவுகளும் வந்துப் போகும். பிள்ளைகளை கொஞ்சம் கனிவாக நடத்துங்கள். அவர்களின் பிடிவாதம் அதிகமாகும். ஜென்ம குரு தொடர்வதால் அவ்வப்போது ஏமாற்றங்களை உணருவீர்கள். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். நாவடக்கம் தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 16, 18, 20 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: சில்வாகிரே, ஆரஞ்சு அதி‌ர்ஷ்ட திசை: தென்மேற்கு

கடகம்
வித்தியாசமாக யோசிப்பவர்களே! சுக்ரன் வலுவாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். உறவினர்களின் கல்யாண வேலைகளை முன்னின்று கவனிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். வீட்டில் கூடுதலாக ஓரு தளம் அல்லது அறைக்கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். 4-ல் நிற்கும் சனியால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். உங்களுக்கும் மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். 14-ந் தேதி மாலை 5. 45 முதல் 15 மற்றும் 16-ந் தேதி இரவு 9. 30 மணி வரை பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் உயரதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். வசதி, வாய்ப்புகள் கூடும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 17, 18, 20 அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை: கிழக்கு

சிம்மம்
தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே! முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் உடனே முடியும். வருமானம் உயரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை அமையும். சகோதரி உதவுவார். 18-லிருந்து சூரியன் பலவீனமாவதால் கண், பல் வலி வந்துப் போகும். தூக்கம் குறையும். சிறுசிறு வீண் பழிகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செவ்வாய் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். 16-ந் தேதி இரவு 9. 30 மணி முதல் 17, 18 ஆகிய தேதிகளில் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் வேற்றுமதத்தை சேர்ந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 14, 19, 20 அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, கிரே அதி‌ர்ஷ்ட திசை: தெற்கு

கன்னி
வெளுத்ததெல்லாம் பாலாக நினைப்பவர்களே! யோகாதிபதி சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சொந்த-பந்தங்களால் ஆதாயமடைவீர்கள். வி. ஐ. பிகளும் உதவுவார்கள். சூரியனும், செவ்வாயும் வலுவிழந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், மனக்கசப்பு வரும். பணப்பற்றாக்குறையால் கடன் வாங்க வேண்டி வரும். சொத்து வாங்கும் முன் தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். பேச்சில் காரம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சிறுசிறு நெருப்புகள் காயங்கள் ஏற்படக்கூடும். திடீர் பயணங்கள் உண்டு. மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். 19, 20 ஆகிய தேதிகளில் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். லாபம் கணிசமாக உயரும். உத்‌தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். நிதானமும், பொறுமையும் தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 15, 17, 18 அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், ரோஸ் அதி‌ர்ஷ்ட திசை: மேற்கு

துலாம்
நெருக்கடி நேரத்திலும் சிரிப்பவர்களே! மாடாக உழைத்தாலும் சேமிக்க முடியாமல் எல்லாமே செலவாகவிடுகிறதே என ஆதங்கப்படுவீர்கள். 18-ந் தேதி முதல் சூரியன் ராசியில் நுழைவதால் உணர்ச்சிவசப்படுவீர்கள். சோர்வு, களைப்பு அதிகமாகும். கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. தவிர்க்க முடியாத செலவுகளால் பண நெருக்கடி அதிகமாகும். ஜன்மச் சனி நடைபெறுவதால் குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வேற்றுமொழியினர் உதவுவார்கள். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். அரசியல்வாதிகளே! சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்புக் கிட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்‌தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். விட்டுக் கொடுக்க வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 14, 16, 18 அதி‌ர்ஷ்ட எண்கள்: 6, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மெரூண், க்ரீம் வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை: தென்கிழக்கு

விருச்சிகம்
பாகுப்பாடு பார்க்காமல் பழகுபவர்களே! ராசிநாதன் செவ்வாய் பத்தில் பலமாக நிற்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். இங்கிதமாகப் பேசி சாதிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, மனை அமையும். புது நகை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினரை சந்திப்பீர்கள். சூரியன் 18-லிருந்து ராசிக்கு 12-ல் மறைவதால் பணப்பற்றாக்குறை ஏற்படும். சிக்கனமாக இருங்கள். அரசு காரிங்கள் தாமதமாக முடியும். ஏழரைச் சனியால் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தூக்கம் குறையும். மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்‌தியோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கலைத்துறையினரே! எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்பு வரும். அனுபவ அறிவை பயன்படுத்த வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 14, 16, 18 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆலிவ்பச்சை அதி‌ர்ஷ்ட திசை: வடக்கு

தனுசு
தவறுகளை தட்டிக் கேட்பவர்களே! ராஜ கிரகங்களான குரு, ராகு, சனி வலுவாக இருப்பதுடன் சூரியனும் சாதகமாக இருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் முன்பு கேட்டப் பொருட்களை இப்பொழுது வாங்கித் தருவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். சுக்ரன் 12-ல் மறைந்திருப்பதால் கல்யாணம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! திறமையான வகையில் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்‌தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். புது பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். அதிரடி முன்னேற்றங்கள் நிறைந்த வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 15, 17, 19 அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ஊதா, பழுப்பு அதி‌ர்ஷ்ட திசை: தென்மேற்கு

மகரம்
முயற்சிகளிலிருந்து பின்வாங்காதவர்களே! சுக்ரனும் சாதகமாக இருப்பதால் தடைகளும், ஏமாற்றங்களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். புது தெம்பு பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். சிலர் புது வீடு மாறுவதற்கு திட்டமிடுவீர்கள். என்றாலும் செவ்வாய் 8-ல் நிற்பதால் மனைவி ஆத்திரத்தில் எதையாவது சொல்லி வைத்தால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் தேடிக் கொண்டிருக்காதீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. விபத்துகள் நிகழக்கூடும். 18-ந் தேதி முதல் சூரியன் சாதகமாவதால் தடைப்பட்ட அரசாங்க விஷயம் உடனே முடியும். புது வேலைக் கிடைக்கும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்‌தியோகத்தில் அதிகாரிகளை எதிர்க்க வேண்டாம். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 16, 17, 19 அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை: கிழக்கு

கும்பம்
ஒரே நேரத்தில் பல வேலை பார்ப்பவர்களே! கேது வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்தால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். ஆன்மிக அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். உறவினர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்துடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால் மனஇறுக்கம், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 17, 19, 20 அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை: கிழக்கு

மீனம்
சுற்றுபுறச் சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்படுபவர்களே! செவ்வாய் 6-ம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். ராகுவும், சனியும் 8-ம் வீட்டில் நீடிப்பதால் சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பு உணர்வு, கசப்பு உணர்வு வந்துச் செல்லும். எல்லோருக்கும் நல்லது செய்தாலும் கெட்ட பெயர்தானே மிஞ்சுகிறது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு கடையை புது இடத்திற்கு மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். உத்‌தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். சின்ன சின்ன வெளிச்சங்கள் தெரியும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள்: 14, 19, 20 அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள்: பிங்க், மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை: தென்கிழக்கு

Leave a Reply