மேஷம்
காலம் தவறாமையை கடைபிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செல்லும் இடமெல்லாம் சிறப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். மனைவிக்கு இருந்து வந்த உடல் நலக்குறைவுகள் குறையும். மனம் விட்டு பேசுவீர்கள். பயணங்கள் இனிதாக இருக்கும். நீண்ட பிரார்த்தனைகள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6 – ம் வீட்டில் நிற்பதால் புகழ், கௌரவம் பலமடங்கு உயரும். சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ராசிக்குள் நிற்கும் கேதுவும், 7 – ல் இருக்கும் ராகுவும், சனியும் உங்களை அவ்வப்போது கோபப்படுத்துவார்கள். ஒரு சிலர் உங்கள் வாயை கிளறி பார்ப்பார்கள். ஏமாந்துவிடாதீர்கள். கொஞ்சம் எதிலும் உஷாராக இருங்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் கட்சி மேல்மட்டத்தை விமர்சித்துக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 9, 11, 15 அதிர்ஷ்ட எண்கள் : 7, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

ரிஷபம்
வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து ஏமாறுபவர்களே! ராகுவும், சனியும் வலுவாக 6 – ம் வீட்டில் இருப்பதால் தீர்க்க முடியாத பிரச்னைகளையும் தீர்க்கும் சக்தி உண்டாகும். சவாலான விஷயங்களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். கடன் பிரச்னை ஓரளவு குறையும். செவ்வாய் 5 – ல் நிற்பதால் சகோதரங்களுடன் மனவருத்தம் வந்து நீங்கும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறி சாதகமாக முடியும். நிலம், சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தலைத்தூக்கும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பாதியில் நின்ற கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் 10 – ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அழகு, இளமைக் கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பெண்களுக்கு இருந்த மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி நீங்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால் பெற்றோரின் உடல் நிலை சீராகும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! வருமானம் உயர வழி பிறக்கும். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 10, 12, 13 அதிர்ஷ்ட எண்கள் : 1, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வெள்ளை அதிர்ஷ்ட திசை : வடக்கு

மிதுனம்
குலம், கோத்திரம் பார்க்காமல் மனித நேயத்துடன் உதவுபவர்களே! கேது பகவான் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் வி. ஐ.பிகள் அறிமுகமாவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும். எதிர்பாராத தொகை ஒன்று கைக்கு வரக்கூடும். சூரியன் 6 – ல் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. சுக்ரன் 8 – ல் மறைந்திருப்பதால் வாகனம் பழுதாகி சரியாகும். 5 – ம் வீட்டிலேயே ராகுவும், சனியும் முகாமிட்டிருப்பதால் பிள்ளைகளுடன் வாக்குவாதம் வரும். உத்தியோகம், கல்வியின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டு பிரிய வேண்டி வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கூடா பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். மேலதிகாரி சில நேரத்தில் கடிந்து பேசினாலும் பல சமயங்களில் கனிவாக நடந்துக் கொள்வார். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகளும், வதந்திகளும் வந்துப் போகும். வாக்கு சாதுர்யத்தால் பிரச்சனைகளைத் தீர்க்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 10, 12, 14 அதிர்ஷ்ட எண்கள் : 4, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மயில் நீலம் அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

கடகம்
எதையும் உடனே கிரகிக்கும் அறிவாற்றல் மிக்கவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் பகவான் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றி கிட்டும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அக்கம் – பக்கம் வீட்டாருடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். சகோதரங்களுக்கிடையே மனம் விட்டு பேசி நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது சாதகமாக முடியும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். தோல் நோய், அலர்ஜி நீங்கும். பிள்ளை பாக்யம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கிருந்து வந்த கூடாப்பழக்கம் விலகும். அவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையைப் பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். 4 – ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீட்டில் கூடுதல் அறைக் கட்டுவீர்கள். முதுகு மற்றும் மூட்டு வலி வரும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். உத்தியோகத்தில் சின்ன சின்ன எதிர்ப்புகள் இருக்கும். அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 11, 13, 15 அதிர்ஷ்ட எண்கள் : 2, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட திசை : வடக்கு

சிம்மம்
பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் சமாதானத்தால் சாதிப்பவர்களே! உங்களுக்கு சாதகமாக புதனும், சூரியனும் இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனம் சரியாகும். தைரியமாக, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். புது முதலீடுகள் செய்து வியாபாரம் தொடங்குவீர்கள். உங்களின் திட்டமிட்டு எல்லா காரியங்களையும் சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது. சனியும், ராகுவும் 3 – ம் வீட்டில் இருப்பதால் முயற்சிகள் யாவும் பலிதமாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். கன்னிப் பெண்களே! தன்னம்பிக்கையுடன் எதையும் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும். கலைத்துறையினர்களே! வெகுநாட்களாக தடைபட்ட வாய்ப்பு கூடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 9, 13, 14 அதிர்ஷ்ட எண்கள் : 4, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, ஆலிவு பச்சை அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

கன்னி
பழைய கலைப் பொருட்களை பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கமுள்ளவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். ராசிநாதன் புதன் மறைந்திருந்தாலும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் எதிலும் முன்னேற்றம் உண்டாகும் ஆனால் ஏழரைச் சனி நடைபெறுவதால் நரம்புக் கோளாறு, மூச்சுப் பிடிப்பு, சளித் தொந்தரவு வந்துப் போகும். மனம் விட்டு பேசுவதாக நினைத்து குடும்ப அந்தரங்களை விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். 15 – ந் தேதி முதல் பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கேது 8 – ல் நிற்பதால் ஆன்மிக தலங்களுக்கு பயணிக்கும் போது கவனமாக இருங்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கனவுத் தொல்லை வரக்கூடும். வியாபாரம் ஓரளவு லாபம் தரும். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 9, 10, 11 அதிர்ஷ்ட எண்கள் : 4, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், க்ரீம் வெள்ளை அதிர்ஷ்ட திசை : கிழக்கு

துலாம்
பிறர் உழைப்பில் வாழாமல் விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் ஆடை, அணிகலன் சேரும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. ஆர்வமில்லாலும், எதிர்மறை சிந்தனைகளுடனும் இருந்தீர்களே! அந்த நிலை மாறும். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. எதிர்பார்ப்புகள் யாவும் நல்ல விதத்தில் முடியும். ஷேர் மூலம் பணம் வரும். உங்கள் பாக்யாதிபதி புதன் வலுவாக இருப்பதால் இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். 12 – ல் செவ்வாய் மறைந்திருப்பதால் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். ராசிக்குள்ளேயே சனியும், ராகுவும் நிற்பதால் சில நேரங்களில் கோபப்படுவீர்கள். அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதற்காக கொஞ்சம் போராட வேண்டி வரும். பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கோரிக்கையை மேலதிகாரி ஏற்பர். சக ஊழியர்களின் கடின உழைப்பால் நிர்வாகத்தின் லாபம் உயரும். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். தன் பலவீனங்களை சரி செய்ய வேண்டிய வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 12, 13, 14 அதிர்ஷ்ட எண்கள் : 3, 5 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, மெரூண் அதிர்ஷ்ட திசை : தெற்கு

விருச்சிகம்
பல துறைகளிலும் ஆழ்ந்த சிந்தனைக் கொண்டவர்களே! உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் நிற்பதால் மனஇறுக்கம், வேனல் கட்டி, கண் வலி வந்துச் செல்லும். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்காதீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் கணவன் – மனைவிக்குள் இருந்த கருத்து மோதல் விலகும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்யம் உண்டாகும். தள்ளுபடி விற்பனையில் வாகனம் வாங்குவீர்கள். புது டிசைனில் மனைவிக்கு ஆபரணம் வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். பெரிய பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 6 – ம் வீட்டில் கேது நிற்பதால் வழக்கில் வெற்றி உண்டு. ஆன்மிகப் பெரியோர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஏழரைச் சனி நடப்பதால் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். 12 – ல் ராகுவும், சனியும் நிற்பதால் தூக்கம் குறையும். கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது கோபப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழி ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சக ஊழியர்கள் அதிசயிக்கும்படி சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 10, 11, 14 அதிர்ஷ்ட எண்கள் : 2, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், ஆரஞ்சு அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

தனுசு
மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கை உடையவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கோவில் விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். புகழ் பெற்ற அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சூரியன் 12 – ல் மறைந்திருப்பதால் சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறிந்துக் கொள்வீர்கள். சின்ன சின்ன சச்சரவுகள் வரக்கூடும். அரசாங்க விஷயங்கள் தள்ளிப் போய் முடியும். புதன் சாதகமாக இருப்பதால் வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய வழக்கு விரைந்து முடியக்கூடும். மனைவியின் ஆரோக்யம் கூடும். சனியும், ராகுவும் லாப வீட்டில் நிற்பதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் உயரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களுடைய ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். கால நேரம் கனிந்து வரும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 12, 14, 16 அதிர்ஷ்ட எண்கள் : 1, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, கிரே அதிர்ஷ்ட திசை : கிழக்கு

மகரம்
ஆகாயத்தில் பறந்தாலும் நடந்து சென்ற நாட்களை மறவாதவர்களே! 4 – ம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது உங்களை வித்தியாசமாக யோசிக்க வைப்பார். மற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உங்களின் ஆறாவது அறிவுக்கு உட்படுத்தி எல்லாவற்றையும் யோசிப்பீர்கள். தாய்வழியில் கொஞ்சம் செலவுகள் இருக்கும். தாயாருக்கு கை, கால் மற்றும் மூட்டு வலி வந்துப் போகும். வீடு கட்டுவது, வாங்குவது சுலபமாக முடியும். ஆன்மிகப் பெரியோர்கள், அரசியல் தலைவர்கள் அறிமுகமாவார்கள். உங்கள் ராசிநாதன் சனி உச்சம் பெற்றிருப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். ஆனால் ராகுவுடன் சேர்ந்திருப்பதால் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பிரபல யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் படிப்படியாக குடும்ப வருமானம் உயரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்றை பைசல் செய்ய முயற்சிப்பீர்கள். தொழிலுக்காக குறைந்த வட்டியில் புது கடன் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். இரவு நேரத்தில் சொந்த வாகனத்தில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடருவீர்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரிகள் சில முக்கிய அறிவுரைகள் தருவார்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். அனைவராலும் மதிக்கப்படும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 13, 14, 15 அதிர்ஷ்ட எண்கள் : 5, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, வைலெட் அதிர்ஷ்ட திசை : தெற்கு

 கும்பம்
சொந்தப் பிரச்சனையை சொல்லிக் கொள்ளாமல் வந்தவர்களை வாழ வைப்பவர்களே! பிரபல யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையை தீர்க்க வழி பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பழைய சொந்த – பந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். செவ்வாய் 8 – ல் மறைந்திருப்பதால் சகோதரங்களால் அலைச்சல் இருக்கும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட முக்கியமான பத்திரங்கள், ஆவணங்களையெல்லாம் பாதுகாத்து வையுங்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரசு அதிகாரிகள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். புது வேலைக் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் உடனே முடியும். உங்கள் ராசிநாதன் ராகுவுடன் நிற்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். கொஞ்சம் ஞானமும், தெளிவும் உண்டாகும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்துக் கொண்டு உதவுவார். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். எங்கும் எதிலும் பொறுமை காக்க வேண்டிய வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 11, 14, 15 அதிர்ஷ்ட எண்கள் : 1, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், க்ரீம் வெள்ளை அதிர்ஷ்ட திசை : மேற்கு

மீனம்
நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைப்பவர்களே! உங்கள் ராசிநாதன் குருபகவான் 4 – ம் வீட்டிலேயே நிற்பதால் உங்களுக்குள் ஒரு சலிப்பு வரும். எத்தனைக் காலம் தான் இப்படியெல்லாம் போராட வேண்டியிருக்குமோ என்றெல்லாம் பல நேரங்களில் நீங்கள் புலம்புவீர்கள். ஆனாலும் கவலைப்படாதீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். பூர்வீக சொத்திலிருந்து வந்த பிரச்னைகள் குறையும். சகோதரங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். அவர்களால் பொருளுதவியும் கிடைக்கும். 9 – ம் வீட்டில் சூரியன் நிற்பதால் உங்களுக்கும் தந்தையாருக்கும் இடையே மனவருத்தங்கள் வந்துச் செல்லும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றி புதுசு வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. ஆனால் 8 – ல் சனியும், ராகுவும் நிற்பதால் கணவன் – மனைவிக்குள் சிலர் கலகத்தை உண்டாக்க முயற்சி செய்வார்கள். வீண் சந்தேகத்தால் பிரிவுகளை சந்திக்க வேண்டி வரும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சளித் தொந்தரவு, தொண்டை வலி, மூச்சு திணறல் வரக்கூடும். நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. கேது 2 – ல் நிற்பதால் பார்வைக் கோளாறு வந்து நீங்கும். சிலர் மூக்கு கண்ணாடி மாற்றுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் இழந்த தகுதி, சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்-. பெரிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். சமயோஜித புத்தியால் சாதிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 9, 14, 15 அதிர்ஷ்ட எண்கள் : 3, 4 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மஞ்சள் அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

Leave a Reply