மேஷம்
எப்போதும் வாழ்வில் எதிர்நீச்சல் போடும் நீங்கள், வறுமையைக் கண்டு பயப்பட மாட்டீர்கள். உங்களின் தனாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வி. ஐ. பிகள் உதவுவார்கள். வீட்டை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். தள்ளிப் போன அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீண் டென்ஷன், பகை, ஏமாற்றம், பழைய கடனை நினைத்த கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளின் பிடிவாத குணத்தை அன்பால் அரவணைத்துப் போங்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நெருடல்கள் இருந்தாலும் மேலதிகாரியின் ஆதரவுக் கிடைக்கும். பொறுத்திருந்து காரியம் சாதிக்க வேண்டிய வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 20, 24 அதிர்ஷ்ட எண்கள் : 8, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட திசை : மேற்கு

ரிஷபம்
யாராக இருந்தாலும் நியாயத்தைப் பேசும் நீங்கள், பழிபாவத்திற்கு அஞ்சுவீர்கள். ராசிக்கு 6 – ம் வீட்டில் ராகுவும், சனியும் நிற்பதால் சுக்ரனும் செல்வதால் போராட்டங்களை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகள் நீங்கும். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சூரியன் பகைத் தாரையில் செல்வதால் மனக்குழப்பம், முன்கோபம், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். காதல் கசந்து இனிக்கும். வியாபாரத்தில் கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். இடைவிடாத உழைப்பால் இலக்கை எட்டும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 20, 22, 23 அதிர்ஷ்ட எண்கள் : 1, 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், ஆலிவ் பச்சை அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

மிதுனம்
சிறுவயதிலேயே சீர்திருத்த சிந்தனையுடைய நீங்கள், அடிமைத்தனத்தையும், மூடப்போக்கையும் எதிர்த்து குரல் கொடுப்பவர்கள். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். ராகுவும், சனியும் சரியில்லாததால் மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். எதிர்பார்த்திருந்த சில காரியங்கள் சாதகமாக முடியும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 23, 24 அதிர்ஷ்ட எண்கள் : 3, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், அடர்நீலம் அதிர்ஷ்ட திசை : கிழக்கு

கடகம்
எதிரிக்கும் நல்லதே நினைக்கும் மனசு படைத்த நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள். புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர், நண்பர்களால் உதவிகள் உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். சுக்ரன் சாதகமாக இல்லாததால் கணவன் – மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல் வந்து நீங்கும். வாகனம் பழுதாகி சரியாகும். ராகுவும், சனியும் 4 – ம் வீட்டில் தொடர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். தாய்வழியில் கருத்து மோதல்கள் வரக்கூடும். மனைவிவழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் கட்சி மேல்மட்டத்தை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 19, 20 அதிர்ஷ்ட எண்கள் : 5, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளம்சிவப்பு அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

சிம்மம்
சண்டையை விரும்பாத நீங்கள் பெரிய மனிதர்களின் தவறுகளை, ரகசியங்களை அம்பலப்படுத்துவதில் வல்லவர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் கலைத் திறனை கண்டறிந்து வெளிக் கொணர்வீர்கள். செல்போன், வாஷிங் மெஷின், இன்டெக்ஷன் ஸ்டவ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். சொந்த – பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கேது உங்களுக்கு சாதகமாக இல்லாததால் எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துச் செல்லும். நட்பு வட்டம் விரியும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். எதிர்ப்புகள் அடங்கும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. கன்னிப் பெண்களே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீ£கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப்பால் உன்னதமடையும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 20, 21 அதிர்ஷ்ட எண்கள் : 2, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு அதிர்ஷ்ட திசை : தெற்கு

கன்னி
நியாயமாக தனக்கு கிடைக்க வேண்டியதைக் கூட சில நேரங்களில் விட்டுக் கொடுக்கும் நீங்கள் மற்றவர்களின் மீது அதிக பாசம் வைப்பீர்கள். சூரியன் வலுவாக 3 – ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். திருமணத்தடை விலகும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டு. செவ்வாய் உங்கள் ராசிக்கு 12 – ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், வீண் டென்ஷன், இரத்த அழுத்தம், சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். சொத்து வாங்கும் போது வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! பள்ளி, கல்லூரி காலத் தோழிகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தலை தூக்கும். மூளை பலத்தால் முன்னேறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 19, 23 அதிர்ஷ்ட எண்கள் : 4, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, மயில் நீலம் அதிர்ஷ்ட திசை : வடக்கு

துலாம்
போட்டியென வந்து விட்டால் புலியாக மாறும் நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். குரு 9 – ம் வீட்டில் நிற்பதால் உங்கள் பேச்சிற்கு மரியாதைக் கூடும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். வி. ஐ. பிகள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வீடு, மனை வாங்குவதற்கும் எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்த வகையில் வந்து சேரும். செவ்வாய் முற்பகுதியில் சாதகமாக இருப்பதால் சகோதரங்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பழைய சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசியிலேயே சனியும், ராகுவும் தொடர்வதால் அவ்வப்போது முன்கோபம், வாக்குவாதம், அவ்வப்போது எதிர்காலம் பற்றிய அச்சமும் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன நட்டங்கள் வரும். உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். இங்கிதமான பேச்சால் இனிமை காணும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 20, 22, 24 அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், பிங்க் அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

விருச்சிகம்
தெளிந்த நீரோடை போல தீர்க்கமாக முடிவெடுக்கும் நீங்கள் யார் மனசும் புண்படாதபடி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பீர்கள். புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் இதமாகவும், இங்கிதமாகவும் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வழக்குகள் சாதகமாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இருப்பதால் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சூரியன் உங்கள் ராசிக்குள் நிற்பதால் அலைச்சல், வேலைச்சுமை, தூக்கமின்மை, அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத்தன்மையால் சாதிக்கும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 23, 24 அதிர்ஷ்ட எண்கள் : 3, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, பிஸ்தாபச்சை அதிர்ஷ்ட திசை : கிழக்கு

தனுசு
முன்னுக்குப் பின் முரணாக யோசிக்கும் நீங்கள், பலரிடம் ஆலோசனைக் கேட்டாலும், உங்க மனதில் என்ன நினைக்கிறீர்களோ, அதைத் தான் செய்வீர்கள். சுக்ரன் செல்வதால் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பெரிய திட்டங்களும் நிறைவேறும். பணவரவு கணிசமாக உயரும். ஷேர் மூலமாகவும் சிலருக்கு பணம் வரக்கூடும். வாகனப் பழுது சரியாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். என்றாலும் கேது 5 – ல் தொடர்வதால் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும். அரசு விஷயங்களில் கவனமாக இருங்கள். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். சனி, ராகு சாதகமாக இருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு புதிய தீர்வு கிடைக்கும். உங்களுடைய கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். எதிர்த்துப் பேசி பங்குதாரர் பணிந்து வருவார். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். பரந்த மனசுடன் பரபரப்பாக செயல்படும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 20, 22 அதிர்ஷ்ட எண்கள் : 4, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, சிவப்பு அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

மகரம்
மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்து பார்ப்பதில் வல்லவர்களான நீங்கள் எங்கும், எதிலும் அழகுணர்வையே விரும்புவீர்கள். உங்கள் ராசிநாதன் சனிபகவான் ராகுவுடன் சேர்ந்திருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்ள. சூரியன் சாதகமாக இருப்பதால் செல்வாக்குக் கூடும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். பழைய நண்பர்களும் தேடி வந்துப் பேசுவார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 20, 22 அதிர்ஷ்ட எண்கள் : 2, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, ரோஸ் அதிர்ஷ்ட திசை : தெற்கு

கும்பம்
சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருக்கும் நீங்கள், போராட்டங்களை ரசித்து வாழக் கூடிய மனசுடையவர்கள். குருபகவான் வலுவாக இருப்பதால் பணவரவு திருப்தி தரும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ராஜ தந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்வீர்கள். குற்றமில்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதை உணருவீர்கள். குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வேலைத் தேடிக் கொண்டிருந்த மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். செவ்வாய் 7 – ல் நிற்பதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிலர் உங்கள் வாயை கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். கேது சாதகமாக இருப்பதால் வேற்றுமாநிலத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளே! கட்சிப் பூசலில் தலையிடாமல் ஒதுங்கியே இருங்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமையும், அலைச்சலும் ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அலைச்சல் இருந்தாலும் கடின உழைப்பால் கரை ஏறும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 20, 22, 24 அதிர்ஷ்ட எண்கள் : 1, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், பிங்க் அதிர்ஷ்ட திசை : மேற்கு

மீனம்
நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். செவ்வாய் 6 – ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்கு வெளிநாட்டில், வேற்றுமாநிலத்தில் வேலை அமையும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிக்கு 8 – ல் ராகுவும், சனியும் நிற்பதால் உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். 20 – ந் தேதி முதல் சூரியன் ஜென்மத் தாரையில் நுழைவதால் முன்கோபம், அடி வயிற்றில் வலி, வேனல் கட்டி வந்து நீங்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை உணரும் வாரமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 18, 20, 22 அதிர்ஷ்ட எண்கள் : 2, 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

Leave a Reply