shadow

உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய இரு மாநிலங்களிலும் முதலமைச்சர் பதவிக்கு மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் போட்டி போடுவதால் பாஜக தலைமை முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது

சமீபத்தில் வெளியான 5 மாநில தேர்தலில் உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தான் முதல்வர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் முதல்வர் யார் என்பதை உறுதி செய்ய முடியாமல் பாஜக மேலிடம் திணறி வருவதாக கூறப்படுகிறது