பிபின் ராவத் மறைவு: முதல்வர் முக்கிய அறிவிப்பு

இந்திய ராணுவத்தின் முப்படை தலைமைத் தளபதியான பிபின் ராவத் அவர்கள் மறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் முதல்வர் புஷ்கர் மிங் தமி தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் எந்த அரசு விழாக்களும் நடைபெறாது என்றும் தேசிய கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அம்மாநில முதல்வர் புஷ்கர் மிங் தமி தெரிவித்துள்ளார்

மேலும் அவர் நேற்று தனது வீட்டில் பிபின் ராவத் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.