shadow

uthama villainரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருந்த உத்தம வில்லன் திரைப்படத்தின் காலை காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் கமல் ரசிகர்கள் இன்று காலை முதல் காட்சியை பார்க்க ஆர்வத்துடன் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நிறுத்தப்பட்டது.

‘உத்தம வில்லன்’ படத் தயாரிப்பாளருக்கும் ஃபைனான்சியருக்கும் ஏற்பட்ட பணப் பிரச்னையால் இன்று காலை வெளியாக இருந்த 8 மணி மற்றும் 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கபட்டது. சென்னையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களின் முன் காட்சி ரத்து குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் அல்லாமல் கர்நாடகா, ஆந்திராவிலும் காலை கட்சிகள் ரத்து  செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து விசாரணை செய்த வகையில் விரைவில் பிரச்னை தீர்க்கப்பட்டு இன்று மாலைக்குள் படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் பணப்பிரச்சனை மாலைக்குள் முடிய வாய்ப்பில்லை என்றும் ஞாயிறு வரை இந்த பிரச்சனை இழுபட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

உத்தம வில்லன் பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ போட்டியின்றி வெளியாகி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply