shadow

uthama villain and aneganகமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், மற்றும் தனுஷ் நடித்த அனேகன் ஆகிய இரண்டு படத்தின் பாடல்களின் உரிமையையும் சோனி நிறுவனம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளது.

ஜிப்ரான் இசையமைப்பில் உருவான உத்தம வில்லன் பாடல்கள் மற்றும் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான அனேகன் பாடல்கள் ஆகியவற்றின் உரிமையை சோனி நிறுவனம் இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது.

இரண்டு படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மேலும் அனேகன் திரைப்படம் செப்டம்பர் மாதத்திலும், உத்தம வில்லன் திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தையும், வேலையில்லா பட்டதாரியின் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் தனுஷின் அனேகன் படத்தையும் அவர்களின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply