இந்த இரண்டு நாட்டிற்கும் போக வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு அரசு எச்சரிக்கை

டென்மார்க் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை ஒன்றில் டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.