shadow

அமெரிக்க விசா வேண்டுமா? சமூக வலைத்தளங்களின் விபரங்களும் வேண்டும்

அமெரிக்காவில் பணிபுரியவோ அல்லது கல்வி பயிலவோ அலல்து சுற்றுலா செல்வதாக இருந்தாவோ விசா வேண்டி விண்ணப்பிக்கும் போது அவர்களது வீட்டு முகவரி மற்றும் குற்றப்பத்திரிக்கை தொடர்பான விபரங்கள் மட்டுமே இதுவரை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் அமெரிக்காவில் தீவிரவாத கும்பல்கள் நுழைவதை தடுக்கும் விதமாக விசா வழங்குவதில் தற்போது புதிய நிபந்தனைகளை அரசு எடுத்துள்ளது.

இதன்படி விசா விண்ணப்பத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பயன்படுத்திய கைபேசி எண், இமெயில், சமூக வலைத்தளங்கள் பயன்பாடு ஆகிய அனைத்து விபரங்களும் கேட்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளுக்கு சென்ற அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்த புதிய விசா நிபந்தனைகள் குறித்த விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன். இதன் மூலம் பயங்கரவாதத்தை தடுக்கலாம் என கூறப்படுகிறது.

US wants visa applicants to submit social medial data

Leave a Reply