நன்றி கூறி அதிபர் டிரம்ப் டுவீட்
அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து அனுப்பும் பிரதமர் மோடிக்கு நன்றி என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்புக்காக ஹைட்ராக்சிகுளோரோகுயின் அனுப்பும் இந்தியாவையும், இந்திய மக்களையும் மறக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு அடிபணிந்து மருந்து அனுப்பும் மோடி அரசை இந்திய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் அமெரிக்காவுக்கு மருந்து அனுப்புவதாக் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் உற்பத்தியை அதிகரித்த பின்னர் தான் அமெரிக்காவுக்கு மருந்து அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
https://twitter.com/realDonaldTrump/status/1247950299408498693