shadow

tcsஇந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களான டிசிஎஸ், மற்றும் இன்போசிஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா திடீரென விசாரணை மேற்கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் எச்1பி விசா விதிமுறைகளை மீறி இருப்பதாக அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி நூற்றுக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக நீக்கி விட்டு, அந்த இடத்தில் எச்1பி விசா உள்ள இந்தியர்களை பணியில் அமர்த்தியது. இந்த எச்1பி விசாக்கள் இந்திய அவுட் சோர்சிங் நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தை அடுத்து மற்றொரு அமெரிக்காவின் பிரபல நிறுவனமான சதர்ன் கலிபோர்னியா எடிசன் என்ற நிறுவனமும் தங்களது பணியாளர்கள் சிலரை டிஸ்மிஸ் செய்துவிட்டு தற்காலிக பணி விசா பெற்றிருக்கும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தியது.

இதனால் வர்த்தக மற்றும் அவுட் சோர்சிங் நிறுவனங்கள், எச்1பி தற்காலிக விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவில் பல வேலைகளைப் பெற்றுள்ள விவகாரம் தற்போது அங்கு பரபரப்பாகியுள்ளது.

இதனையடுத்தே எச்1பி விசா விதிமீறல்களை டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் செய்துள்ளதா? என்பதை அறியும் நோக்கில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply