shadow

சில வாரங்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டின் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர் என்பதும், ஏராளமானோர் அகதிகளாக வெளிநாடு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் பாதிப்புகளை நேரில் கண்டறிய அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி உக்ரைன் நாட்டிற்கு விசிட் செய்து உள்ளார்

அவர் உக்ரைன் நாட்டின் அதிபரின் மனைவியை நேரில் சந்தித்து கட்டிப் பிடித்து தனது ஆறுதலை கூறியுள்ளார்

அதுமட்டுமின்றி உக்ரைன் நாட்டின் அகதிகளையும் அவர் நேரில் பார்த்து ஆறுதல் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன