shadow

world cup footballஉலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆரம்பிக்க இன்னும் 90 நாட்களே உள்ள நிலையில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மாறி மாறி உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று ரஷ்ய கால்பந்து சம்மேளம் விடுத்த அறிக்கை ஒன்றில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாட அமெரிக்க நாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. சிரியா, ஈராக், போன்ற நாடுகளில் அத்துமீறி ராணுவ நடவடிக்கை எடுத்து வரும் அமெரிக்காவை உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்துபவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா ரஷ்ய அணியை உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியதற்கு தற்போது ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உலகக்கோப்பை கால்பந்து சம்மேளனம், விளையாட்டில் அரசியலை கலக்க வேண்டாம் என்றும், கால்பந்து விளையாட்டை மைதானத்தில் மட்டும் விளையாட வேண்டும், அரசியலில் விளையாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply