shadow

விஜய்யுடன் மோது சூர்யா-ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘பைரவா’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக சூர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷின் படங்கள் வெளியாகவுள்ளது.

‘பைரவா’ ரிலீஸ் ஆகும் அதே பொங்கல் தினத்தில் சூர்யாவின் ‘எஸ் 3’ மற்றும் ஜி.வி,.பிரகாஷின் ‘புரூஸ்லீ’ வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘எஸ் 3’ திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருந்து தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடட்ந்ஹ 2007ஆம் ஆண்டு சூர்யா+ஹரி கூட்டணியில் உருவான ‘வேல்’ மற்றும் விஜய்+பரதன் கூட்டணியில் உருவான ‘அழகிய தமிழ்மகன்’ படங்கள் மோதின. தற்போதும் அதே கூட்டணியினர் இணைந்த ‘பைரவா’ மற்றும் ‘எஸ் 3’ மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply