shadow

0 copyவிஸ்வரூபம் படத்தை அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பார்வதிமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

 கமல்ஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஊர்வசி நடிக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன் இருவேடங்களில் நடிக்கிறார். 8ஆம் நூற்றாண்டி கூத்துக்கலைஞராகவும், 21ஆம் நூற்றாண்டி சூப்பர் ஸ்டாராகவும் நடித்து வருகிறார். 8ஆம் நூற்றாண்டு கூத்துக்கலைஞராக நடிக்கும் கமல்ஹாசனின் மனைவியாக வரும் ஊர்வசி கர்ப்பம் உண்டாவது போன்ற காட்சி ஒன்று படத்தில் வருகிறது. இந்த படத்தில் ஊர்வசியின் கர்ப்பத்தை கமல் கலைக்க சொல்வது போன்ற காட்சி ஒன்று இந்த படத்தில் வருகிறது.”

ஆனால் இரண்டாவது திருமணம் செய்து தற்போது உண்மையாகவே கர்ப்பமாக இருக்கும் ஊர்வசி, கர்ப்பத்தை கலைக்கும்படியான காட்சியில் நடிக்க செண்டிமெண்டாக மறுத்தார். பின்னர் கமல்ஹாசனும், இயக்குனர் ரமேஷ் அரவிந்தும் சமாதானம் செய்து அந்த காட்சியில் ஊர்வசியை நடிக்க வைத்தனர்.

Leave a Reply