டெட்டாலை விட சிறுநீர்தான் சிறந்த கிருமிநாசினி. லாலு பிரசாத் யாதவ் பரபரப்பு பேச்சு

டெட்டாலை விட சிறுநீர்தான் சிறந்த கிருமிநாசினி. லாலு பிரசாத் யாதவ் பரபரப்பு பேச்சு
lalu
முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் தன்னுடைய சிறுநீரை தானே குடித்து வருவதாக தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைபோல பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கிருமி நாசினியான டெட்டாலைவிட சிறுநீர் சிறந்த கிருமி நாசினி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஹோமியோபதி அறிவியல் மாநாட்டில் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு  பிரசாத் யாதவ் கலந்து கொண்டார். இங்கு அவர் உரையாற்றியதாவது: ”ஆங்கில முறை மருத்துவம் என்பது அறுவை சிகிச்சை மட்டும்தான். ஆனால், ஹோமியோபதி மருத்துவ முறையில் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்த முடியும். இதில் பக்க விளைவுகள் கிடையாது.

முன்பெல்லாம் நாம் சிறுவர்களாக இருந்தபோது ஏதாவது காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் சிறுநீர் விடுவோம். இது காயம்பட்ட இடத்தில் கிருமி நாசினியாக செயல்பட்டு, அந்த காயம் புண்ணாக மாறாமல் தடுத்தது. அவசர காலத்தில் சிறுநீர் நமக்கு மருந்தாக பயன்பட்டது.

ஆனால், இப்போது மக்கள் டெட்டால் பயன்படுத்துகிறார்கள். அதைக் கொண்டு கை கழுவுகிறார்கள். இதுதான் நமது முன்னேற்றம். ஆனால், டெட்டாலை போல் சிறுநீரும் அவசர காலங்களில் பயன்படுத்தக் கூடியதுதான்” என்று கூறினார். லாலுவின் பேச்சை கேட்டு எத்தனை பேர் டெட்டாலுக்கு பதிலாக சிறுநீரை உபயோகப்படுத்த போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply