கொரோனா எதிரொலி

சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு வகையான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வரும் நிலையில் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் இந்தாண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான தேதி ஜூன், 5ம் தேதி முடிவு செய்யப்படும் என மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

முன்னதாக இந்தாண்டுக்கான, முதன்மை தேர்வு, மே 31-ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, முதன்மை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது

Leave a Reply