மணப்பெண்ணுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி!

மணப்பெண்ணுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி!

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண்ணுடன் மட்டும் தனியாக செல்பி எடுக்க முயன்றா இளைஞர் ஒருவரை மணமகள் குடும்பத்தினர் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபி மாநிலத்தில் புர்ரா என்ற இடத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மணமக்களுக்கு பரிசு கொடுத்து வாழ்த்திய பின்னர் மணமகளுடன் மட்டும் செல்பி எடுக்க முயன்றார். இதற்கு மணமகளின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. மணமகளின் உறவினர்கள் செல்பி எடுக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருமண வீட்டில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது.

Leave a Reply