உ.பியில் ரயில் விபத்து. 2 பேர் பலி. 12 பேர் படுகாயம்

trainஉத்திர பிரதேசத்தின் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் மீது பாசஞ்சர் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற ரயில் நிலையத்தில் சோபன் இன்டர் சிட்டி என்ற எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. இந்த ரயில் மீது கட்னி என்ற பாசஞ்சர் ரயில் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி பெட்டி மிகக்கடுமையாக சேதமடைந்தது. கடைசி பெட்டியில் இருந்த இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.  விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply