பள்ளி, கல்லூரிகள் திடீர் விடுமுறை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் தான் தமிழகம் உள்பட நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் திடீரென விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் மூழ்கி உள்ளதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது