shadow

அடிபம்பில் தண்ணீர் பிடித்து எளிமையாக குளித்த அமைச்சர்: வைரல் வீடியோ

உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் சாதாரண பொது மக்களைப் போல அடி பம்பில் தண்ணீர் பிடித்து குளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருக்கும் நந்தகோபால் என்பவர் தனது வீட்டில் அடி பம்பில் தண்ணீர் அடித்து குளித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

யோகி அரசுக்கும் மற்ற அரசுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் என்றும் யோகி அமைச்சரவையில் உள்ளவர்கள் அனைவரும் எளிமையானவர்கள் என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்