shadow

உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? அகிலேஷூக்கு அதிர்ச்சி கொடுக்கும் கருத்துக்கணிப்பு

உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது என்பதை தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரு கெளரவ பிரச்சனையாகவே கருதி வருகிறது. எனவேதான் ஒவ்வொரு முறையும் உபியில் தேர்தல் நடக்கும்போது பிரதமர் உள்பட தேசிய தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்வார்கள்

வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக உபியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது உச்சக்கட்ட பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தமுறை ஆட்சியை பிடிப்பது யார்? என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு எடுத்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின்படி பாஜக 34 சதவீத வாக்குகளைப் பெற்று 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுஆட்சியைப் பிடிக்கும் என்றும், சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி 31 சதவீத வாக்குகளுடன் 147 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடிக் கட்சி 47 தொகுதிகளிலும் பகுஜன் சாம்ஜ்வாடிக் கட்சி இந்த முறை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளது.

ஊழல் மற்றும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் காரணமாக பிரதமர் மோடியில் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும் அவருடைய பண மதிப்பிழப்பு நடவடிக்கையே பாஜக இந்த முறை ஆட்சியை பிடிக்க காரணமாகிறது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply